ஜீவனுள்ள தேவனின் சபை THE CHURCH OF THE LIVING GOD Erie Pennsylvania U.S.A. 51-07-27 1. …….கூடிடும். கர்த்தாவே, நான் நம்புகிறேன். நாம் தலைகளை தாழ்த்துவோம். எங்கள் பரலோகப் பிதாவே, "கர்த்தாவே, நான் நம்புகிறேன்", என்று அவ்விதம் எங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து நாங்கள் பாடினதற்காக உமக்கு இன்றிரவு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பல வருடங்களுக்கு முன் வலிப்பு நோயினால் அவதியுற்ற மகனின் தகப்பனார், "என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவி செய்யும்”, என்று கூறினது போல. அவர் திரும்பி வரும் போது, விசுவாசத்தைக் காண்பாரோ-? என்று ஒரு நாளில் கேட்கப்பட்ட கேள்வியை கேட்டிருக்கிறோம். அவர் திரும்ப வரும் போது நீதியை காண்பாரோ-? அல்லது கிறிஸ்தவர்களை காண்பாரோ-? என்று கேள்வி கேட்கவில்லை. ஆனால் அவர் திரும்ப வரும் போது விசுவாசத்தைக் காண்பாரோ-? ஏனெனில் அந்த காரியத்தை மக்கள் விட்டுவிடுவார்கள் என்று அவர் அறிந்திருந்தார். மேலும் இந்த கடைசி நாட்களில் எவ்விதமாய் இருக்கும் என்று பரிசுத்த ஆவியானவர் பேசினதையும் நாம் கேட்டிருக்கிறோம். ஏனெனில், "மக்களும் தேவத்துவத்தின் வேஷத்தை தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருப்பார்கள்", அது விசுவாச குறைவாய் இருக்கிறது. கர்த்தாவே, இன்றிரவு உமக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், ஏனெனில் ஒரு சின்ன விசுவாசம் எங்களிடத்தில் இருக்கிறதை எங்கள் இருதயத்தில் நாங்கள் உணருகிறோம். கர்த்தாவே, அந்த விசுவாசமானது இன்றிரவு மிகவும் உயரும்படிக்கும், முற்றிலும் எங்களை விட்டுக் கொடுத்து, கிறிஸ்துவண்டையில் சரணடைந்து பெரிதும் மற்றும் மகத்தான கிரியைகள் இன்றிரவு காண்பிக்கப்படும் அளவுக்கு அதை அதிகரிக்கச் செய்யும். இப்பொழுது எங்கள் குறைகளை மன்னித்து, எங்களுக்கு உதவி செய்யும். மகத்தான தேவனின் அலுவலராகிய பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இங்கே பூமியில் கர்த்தராகிய இயேசுவுக்கு ஒரு மணவாட்டியை தேடிக் கொண்டிருக்கையில், இருதயத்திலும் விசேஷித்த வகையில் விஜயம் செய்வாராக. இதை அவர் தாமே இன்றிரவு இங்கிருக்கும் ஒவ்வொருவரின் நேசமுள்ள தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2. நான் சகோதரன் பாக்ஸ்டர் உயரத்துக்கு உயரமானவன் கிடையாது. இங்கே இன்றிரவு கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை பிரதிநிதித்துவபடுத்தும்படிக்கு இங்கே இன்றிரவு இருப்பதற்கான சிலாக்கியத்திற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், மக்கள் பெரிதான விசுவாசத்தை பெற்றுக் கொள்கிற அளவுக்கு இது தாமே ஒரு வெற்றியுள்ள கூட்டமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி இல்லாத பட்சத்தில்... நம்முடைய கூட்டம் வெற்றியுள்ளதாக அமையாது. நமக்கு இன்னும் இந்த ஆராதனையில் இரண்டு இரவு கூட்டங்களை விடப்பட்டிருக்கிறது. மேலும் இது தாமே உங்கள் எல்லோருக்கும் பெரிதும் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இப்பொழுது, "விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்ற அந்த உண்மையை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பீர்கள். ஏனெனில் தேவனிடத்தில் வருகிறவன், அவர் உண்டென்றும், தம்மை தொடர்ச்சியாய் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்”, எனவே இன்றிரவு, அவருடைய ஆசீர்வாதத்திற்காக நாம் அவர் மேல் காத்திருக்கையில், அவர் தாமே நமக்கு கிருபையின் மேல் கிருபையை கூட்டிக் கொடுப்பாராக. 3. நான் இங்கே வந்து கொண்டிருந்த போது, திரு. பாக்ஸ்டர், அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன், ஒரு வல்லமையான பிரசங்கத்தை நிகழ்த்தினதற்காக நான் அவருக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வார்த்தையை பிரசங்கித்தல் மட்டுமே எப்பொழுதும் வெற்றியுள்ள கூட்டத்திற்கான விளைவுகளை கொண்டு வருகிறது. "விசுவாசமானது கேள்வியினாலே வரும், தேவனுடைய வார்த்தையை கேட்பதினாலே வரும்". இந்த மாலை கூட்டத்தில் நாம் கூடி வந்திருக்கையில், தேவனுடைய தேவனுடைய வார்த்தையைப் படிப்பது விசுவாசத்தைக் கொண்டு வரும். வார்த்தையிலிருந்து சிலவற்றை படிக்க விரும்புகிறேன், ஏனெனில் ஏனெனில், மற்ற மனிதர்களின் வார்த்தையை போல, என்னுடைய வார்த்தைகளும் ஒழிந்து போகும். ஆனால் தேவனுடைய வார்த்தையோ விழுந்து போகாது, ஏனெனில் அது தேவனால் எழுதப்பட்டதாய் இருக்கிறது. 4. வேதாகமங்களை வைத்திருக்கிறவர்கள், இந்த வேத வசன பாகத்திற்கு நீங்கள் திருப்பலாம், அது தாமே பரிசுத்த யோவான் எழுதின புத்தகத்தில் காணப்படுகிற 5-ம் அதிகாரம். இந்த சாயங்கால ஆராதனைக்கு முன்னோடியாக இந்த அதிகாரத்திலிருந்து ஒரு பாகத்தை படிக்க விரும்புகிறேன். இதிலிருந்து சில காரியங்களைப் பேசி, தேவன் நமக்கு செய்த காரியங்களைக் குறித்ததான காட்சியை பேசின பின்னர் நாம் ஜெப வரிசையை அழைப்போம். திரு. பாக்ஸ்டர், இந்த கூட்டத்தின் முன்பாகத்தில், இந்த ஆராதனைகளின் நேரத்தில் நடந்த சாட்சிகளை பகிர்ந்து கொண்டிருந்தார் என்று நான் புரிந்து கொள்கிறேன். சில சமயங்களில் நானும், கடந்த காலங்களில் தேவன் செய்த சில காரியங்களை எடுத்து ஒப்பிட்டுப் பேசுவேன். 5. இப்பொழுது தேவனுடைய வார்த்தையை வாசிப்போம். இவைகளுக்குபின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். எபிரெய பாஷையிலே பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் சில சமயங்களிலே தேவ தூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன்: கலக்கப்படும் போது ஆண்டவரே, குளத்தில் என்னைக் தண்ணீர் கொண்டு போய்விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். இயேசு, அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக் கொண்டு, நடந்து போனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது. எனவே நீங்கள் வீட்டிற்கு திரும்பி போனபின், இந்த அதிகாரத்தின் தொடர்ச்சியை படியுங்கள். நேரத்தை சேமிக்கும்படிக்கு 19-வது மற்றும் 20-ம் வசனத்தை படிக்க விரும்புகிறேன், ஏனெனில் நான் இன்றிரவு பேச வேண்டிய நேரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அதன் பிறகு இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக கூறினது. யூதர்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டபோது இது நிகழ்ந்தது. 6. வேதாகம் நாட்களில் பட்டணத்து வீதிகளில் தேவனுடைய குமாரன் நடந்து செல்லும்போது அங்கிருந்த வியாதியஸ்தர்களையும், துன்பப்படுகிறவர்களையும் கண்டு எவ்வளவாய் அவர் மனதுருகியிருப்பார் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? எபிரெய மொழியில் இந்த குறிப்பிட்ட இடம் 'பெதஸ்தா' என்று அழைக்கப்படுகிறது. காரணம் அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. அது தாமே (செம்மறி) ஆட்டு சந்தை அண்டையில் இருந்தது, அங்கே இந்த வாசல் வழியாக ஆட்டு மந்தையை கொண்டு வருவார்கள். எனவே அந்நாளில் அந்த பிரத்தியேகமான மேம்பட்ட நிகழ்வு ஏறக்குறைய நிகழவிருந்தது. ஏனெனில் வானத்திலிருந்து ஒரு தேவ தூதன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இறங்கி வந்து, அந்த தண்ணீரை கலக்குவான் என்று மக்கள் விசுவாசித்தார்கள். இப்பொழுது இங்கே ஈரி (Erie) ஏரியண்டை வசிக்கிற மக்களுக்கு இது எவ்வளவு ஒரு கலங்கின தண்ணீர் என்று தெரியும். அந்த ஏரி தண்ணீரில் தண்ணீரின் ஓட்டம் ஒரு வழியாகவும், அதன் அலைகள் இன்னொரு வழியாகவும் இருக்கும், அதினிமித்தம் அதின் தண்ணீர் கலங்கின நிலையில் இருக்கும். அது படகு ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தான ஏரியாக இருக்கும். 7. இந்த குளத்தில் அவர்கள் செம்மறியாடுகளை குளிப்பாட்டுவார்கள், இது ஒரு வட்டமான குளம், கிட்டத்தட்ட இந்த கட்டிடத்தின் அளவில் அது இருந்திருக்கும். அங்கே, ஒரு குறிப்பிட்ட காலத்தில், தண்ணீர் கலக்கப்படும். ஒரு தூதன் தான் இந்த தண்ணீரை சுழலச் செய்தோ அல்லது கலக்குவான் என்று யாரோ ஒருவர் கூறினதாக சொல்லப்பட்டது. ஆனால் ஒரு சில மக்களுக்கோ இது ஒரு மூட நம்பிக்கையாக இருக்கலாம். இவ்விதமான ஒரு காரியத்தை தேவன் செய்வார் என்று வேதவசனத்தில் எழுதப்படவில்லை, எனவே அநேக மக்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். ஆனால், வேறு சிலர் அதை உண்மை என்று விசுவாசித்தார்கள், காரணம் அது விளைவைக் கொடுத்தது. ஏனெனில், ஏதோ ஒரு வித வியாதியினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் விசுவாசத்தினால் முதலாவது தண்ணீரில் அடியெடுத்து வைக்கும் போது, அந்த தூதன்... அந்த தண்ணீரின் மகத்துவம், அதின் பிரத்தியேகமான நிகழ்வு, தண்ணீர் கலங்குதல் போன்றவற்றின் காரணம் அந்த குளத்தை சுற்றிலும் சுவர் இருந்ததால் அந்த சுவற்றை சுற்றி ஓடின காற்றானது அவ்விதமான காரியத்தை செய்தது என்று அநேக மக்கள் எண்ணினார்கள். எப்படியெனில் தண்ணீர் உள்ளே வருகிற திசைக்கேற்ப தண்ணீர் ஓட்டம் இருக்க, அதை காற்றானது திருப்பி அனுப்பும் போது, தண்ணீரை கலங்கின நிலைக்கு அது மாற்றிப் போட்டது. ஆனால் விநோதமான காரியமென்னவெனில், விசுவாசமுள்ள ஒரு நபர் அந்த குளத்தில் அடியெடுத்து வைக்கும் போது, தண்ணீரின் கலங்குதலும் நின்று, அந்த நபரும் நோய் எப்படிப்பட்டதாயிருந்தாலும் சுகத்தை பெற்றுக் கொண்டார். 8. இப்பொழுது, அது விநோதமான காரியமாய் இருந்தாலும், அந்த குளத்தின் மேன்மையின் விளைவை அவர்கள் கண்கூடாக கண்டார்கள். அந்த நபரின் மேலாக நடந்த விளைவையும் அவர்கள் கண்கூடாக காண முடிந்தது. எனவே தேவன் ஒரு தூதனை கீழே அனுப்பினார் என்று அவர்கள் விசுவாசித்தார்கள். எனவே வேத வசனத்தில் அவ்விதமாக எழுதப்பட்டபடியால், அது ஒரு தூதன் என்று கிறிஸ்தவ மக்களாகிய நாம் அதை விசுவாசிக்கிறோம். காரணம் அது ஒரு தூதன் என்று வேதாகமம் கூறுகிறது. வேதாகமம், அதாவது புதிய ஏற்பாடு அந்நாட்களில் எழுதப்படாமல் இருந்தது. இன்றைக்கு நாம் செய்வது போல, அவர்கள் விசுவாச படிகளில் நடந்து, வேறொரு காலத்தில் நடந்தார்கள். விசுவாச படிகள்-! ஆனால் நம் எஜமான் வந்த போது, அவர் வியாதிப்பட்ட சரீரத்தின் சுகத்திற்கான அருளப்பட்ட வழியாக இருந்தார். தேவன் ஒவ்வொன்றுக்கும் காலங்களை கொண்டு இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சந்ததிக்கென்று அருளப்பட்ட வழியை வைத்திருக்கிறார். 9. சார்லஸ்-பு-ஃபின்னி நான் நினைக்கிறபடி பரிசுத்த பவுலுக்கு அவரும் ஒருவர். பத்து லட்சம் ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கு சம்பாதித்தார் என்று நிச்சயத்துடன் கூறுகிறார். சார்லஸ் அடுத்தபடியாக வந்த வல்லமையான ஊழியக்காரர்களில் ஃபின்னி அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் நன்கு படித்தவர், அவர் தன்னுடைய நாட்களில் உலகத்திற்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய செய்தியாக இருந்தார். நூற்றுக்கணக்கான வழக்றிஞர்களை தன்னுடன் பணிபுரிய வைத்திருந்த ஒரு படித்த மனிதன், அவருடைய சுயசரிதையை நீங்கள் படித்திருப்பீர்கள், அவ்விதமான மார்க்க சம்பந்த புத்தகங்களை படித்த அநேகருக்கு அது ஒரு சிறந்த வேலைப்பாடாய் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதன் பிறகு டுவைட் மூடி வந்தார், அவர் கல்லாதவர், படிப்பறியாதவர். அவருடைய இலக்கணம் மிகவும் குறைபாடுடையது, ஆனால் அக்காலத்தின் தேவனுடைய செய்தியாக இருந்தார். எனவே ஒவ்வொரு காலத்துக்கும், தேவன் ஒரு செய்தியைக் கொடுத்தார். 10. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தின் வழியாக பயணப்பட்டுப் போகையில், மரத்தில் தூக்கப்பட்ட வெண்கல சர்ப்பத்தின் செய்தியை தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். ஒன்றுக்கு மேற்பட்ட காரணத்திற்காக அது கொடுக்கப்பட்டது. பாவத்தின் மன்னிப்புக்கும் மற்றும் அவர்களுடைய மருத்துவ உதவிகளுக்கும் சுகப்படுத்த முடியாத பாம்பு கடியினால் அவதிப்படும் அவர்களுடைய சரீர சுகத்திற்கும் அது கொடுக்கப்பட்டது புத்திசாலிகளும் (shrewd), மருத்துவ நிபுணர்களான எகிப்தியர்களின் எல்லா ஞானத்தையும் கற்றவனாய் மோசே இருந்தான். ஆனால் அவனுடைய நிவாரணங்கள் இவ்விதமான பாம்பு கடிக்கு உதவ முடியாமற் போனது, ஆனால் நாம் அது உண்மை கூறுகிறது. அவன் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தின போது, என்று விசுவாசிக்கிறோம் காரணம் வேதாகமம் அதைப் பற்றிக் பார்த்து; அவர்களுடைய பாவங்களுக்காகவும், தேவனுடைய மக்கள் வேறொன்றையும் செய்யாமல் அதை நோக்கி மட்டும் ஊழியக்காரனை நிராகரித்ததற்காகவும், அவனுக்கு விரோதமாக குறை கூறினதற்காகவும், பாம்புகடியின் சுகத்திற்காகவும் என ஒன்றுக்கு மேற்பட்ட தேவனால் கொடுக்கப்பட்ட நிவாரணம் என்று விசுவாசிக்க வேண்டும். 11. இயேசு, "மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினது போல; மனுஷ குமாரனும் அவ்விதமே உயர்த்தப்பட வேண்டும்", என்றார். எனவே, அந்த சர்ப்பம் அநேக, அநேக வருடங்களுக்கு சுகத்திற்கான வழியாக தேவனால் கொடுக்கப்பட்டது. அந்த சர்ப்பம் கொடுக்கப்பட்ட பின்பு, மக்கள் அந்த சர்ப்பம் எதற்காக கொடுக்கப்பட்டதோ அதை விட்டு அதை ஆராதிக்கத் துவங்கினார்கள். அது தாமே மக்களை விக்கிரக ஆராதனைக்குக் கீழாகக் கொண்டு வந்தது, எனவே தீர்க்கதரிசி அவர்களிடத்தில் சென்று, சர்ப்பத்தை எடுத்து, அதை அழித்துப் போட்டான். பின்னர், மக்களுக்கு சுகம் தேவைப்பட்ட போது, தேவன் ஒரு தூதனை குளத்திற்கு போகும்படி கீழே அனுப்பினார். ஒரு தேவ தூதன் கீழே வந்து, குளத்தைக் கலக்கினான்; அப்பொழுது விசுவாசத்தோடு முதலில் இறங்குகிறவன் சுகமடைவான் என்று வேதாகமம் கூறுகிறது. 12. எனவே, இங்கே மேற்கோள் காட்டப்பட்ட வேதவசனம்; குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள் என்று உறுதியாக கூறுகிறது. முதலில் சென்ற நபர் சொஸ்தமானதும், முழு வல்லமையும் (தண்ணீரை அந்த தூதன் கலக்கினதும் அவருடைய வல்லமை) வியாதியஸ்தனுக்குள் சென்றது. பின்னர் தண்ணீர் கலங்குதல் நின்றது, அந்த தூதனும் அடுத்த சமயம் வரைக்கும், ஒரு வேளை நான்கு, ஐந்து அல்லது ஆறு வாரம் வரைக்கும் பல நாட்களுக்கு திரும்பி வரவில்லை. ஆனால் மக்களோ அந்த தூதன் வருவதற்கு பொறுமையுடன் காத்திருந்தார்கள். இங்கே உட்கார்ந்திருக்கிற அநேக மதத்தலைவர்கள், அந்த குளத்தண்டை மக்கள் ஒருவரை ஓருவர் முந்திக் கொண்டு, முதலாவது இறங்கும்படிக்கு, எப்படியாக கத்திகளைக் கொண்டு சண்டைபோட்டுக் கொண்டார்கள் என்று வரலாற்றில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று சந்தேகமில்லை. அப்படியானால் உபாதைக்கு உள்ளானவர்கள் எவ்வளவு பெரிய கூட்டமாக அங்கு இருந்திருக்கும் என்று பாருங்கள். 13. அதன் பின்னர் கன்னி பிறப்பின் வழியாக தெய்வீகத் தன்மையுடைய தேவ குமாரன் வந்த போது, அவர் தாமே தேவனால் அருளப்பட்ட ஆட்டுக்குட்டியும், அருளப்பட்ட இருந்தார். எனவே அவர் பிறந்த போது, அந்நாளில், அவருடைய பலியாகவும், யேகோவா யீரேயாயும், அருளப்பட்ட ஒருவராயும் நாளில் இருந்த மக்கள், குறிப்பாக மார்க்க சம்பந்தமான மக்கள் செம்மையான பாரம்பரிய வழியில் வரவில்லை. ஆனால் அவரோ அவரை விசுவாசிக்க வில்லை, ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்த தொழுவத்தில் பிறந்து, அங்கே துணியால் சுற்றப்பட்டவராய் தாழ்மையான வழியில் வந்தார். ஒரு இராஜா பிறந்தால் பாடப்படும் பாடல் அவருக்கு பாடப்படவில்லை. அழிவுள்ள ஒரு இராஜா பிறக்கும் போதே மக்கள் பாடல்களை பாடி கொண்டாடுவார்கள். ஆனால் இந்த இராஜாவின் பிறப்பின் போது பாடுவதற்கு எந்த இராஜாவும், எந்த மக்களும் வரவில்லை. ஆனால் தேவ தூதர்கள் கீழே இறங்கி வந்து, "தாவீதின் பட்டணத்தில் இரட்சகராகிய கிறிஸ்து பிறந்திருக்கிறார்”, என்று பாடினார்கள். 14. அந்நாட்களில் சில வானசாஸ்திரிகள் தனித்துவமுடைய ஒரு நட்சத்திரத்தைக் கண்டார்கள். இன்றைக்கு நம்மிடத்தில் இருப்பதைக் காட்டிலும் அவர்கள் அதிகமான ஆய்வகங்களை கொண்டு இருந்தார்கள். ஏனெனில் அவர்களுடைய ஒவ்வொரு பட்டணத்திலும் தனித்தனியான வான ஆய்வகம் இருந்தது. நட்சத்திரங்களைக் கொண்டு அவர்கள் நேரத்தை கணக்கிட்டார்கள். ஜாமக்காரன் அந்த வான ஆய்வகத்தின் கோபுரத்தில் நின்று, நட்சத்திரத்தை கவனித்துக் கொண்டிருப்பான். ஒருவன் ஜாமக்காரனை பார்த்து, "இப்பொழுது நேரம் என்ன-?", என்று கேட்டது, நினைவுக்கு வருகிறதா-! அதற்கு அவன், "பகலும் வருகிறது, இரவும் வருகிறது", என்பான். அவர்கள் நட்சத்திரங்களை கவனித்து, நேரத்தை கணக்கிட்டார்கள். இப்பொழுது இதை கவனியுங்கள், மாயவித்தை என்று இவ்விதமாக நாம் அழைக்கும் இதை, சிறு பிள்ளைகளும் கூட புரிந்து கொள்ளக் கூடிய இந்த புதிரான ஒளி, கீழ்திசை நாடுகள் எங்கும் உள்ள அவர்களுடைய ஒவ்வொரு வான ஆய்வகங்களில் தென்பட்டது. அதினிமித்தம், "அவருடைய நட்சத்திரத்தை கிழக்கிலே கண்டோம்”, என்றார்கள். உண்மையில் அவர்கள் அங்கே கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தை காணவில்லை. ஆனால் அவர்கள் கிழக்கில் இருந்து, பாலஸ்தீனா இருக்கும் மேற்கு திசையில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டார்கள். அந்நாளில் அந்த வான சாஸ்திரிகளைத் தவிர வேறு எந்த வான ஆய்வகங்களும் அல்லது வேறு எந்த வரலாற்று ஆசிரியர்களும் இன்னும் மற்ற எவர்களும் அந்த நட்சத்திரத்தை காணவில்லை. அது தாமே அவர்களை கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்தினது. அது தாமே தேவனால் அருளப்பட்ட வழிகாட்டியாக இருந்தது. 15. அந்த புருஷர்கள் நோவாவின் மூன்று குமாரர்களான சேம், காம், யாப்பேத்தின் சந்ததியில் வந்தவர்கள். எனவே அவர்கள் அங்கே வந்து தேவனுடைய குமாரனுக்கு வெகுமதிகளை வழங்கினார்கள். "சுவிசேஷமானது சகல ஜனத்தாருக்கும், பாஷை காரர்களுக்கும், தேசங்களுக்கும் பிரசங்கிக்கபட்ட பின்னர் முடிவு வரும்”, என்று அவர் மத்தேயு 24ல் கூறியிருக்கிறார். பிதாக்கள், அவருடைய பிறப்பை நினைவு கூறும்படிக்கு அங்கே வந்து; பொன்னையும், தூபவர்கத்தையும், வெள்ளை போளத்தையும் வெகுமதியாக கொடுத்து, பணிந்து கொண்டார்கள். அதன் பின்னர் அவருடைய பிள்ளைகள் யாவரும் சுவிசேஷத்தின் செய்தியை கேட்டனர். 16. இப்பொழுது, பொதுவாக விசுவாசிக்கப்படுகிற சுவிசேஷம், அது தாமே தேவனுடைய வார்தையாய் இருக்கிறது, ஒருவகையில் அது உண்மை தான். ஆனால் தேவனுடைய வார்த்தை என்பது சுவிசேஷம் மட்டும் இல்லை. தேவனுடைய வார்த்தை என்பது சுவிசேஷத்தை உற்பத்தி செய்கிற வித்தாய் இருக்கிறது. விதைக்கிறவன் ஒருவன் புறப்பட்டு விதையை விதைத்தான் என்று இயேசு கூறினார். சில விதைகள் கற்பாறைகள் இருக்கும் இடத்திலும், சில வழியருகேயும் விழுந்தது, அவைகளை ஆகாயத்து பறவைகள் வந்து பட்சித்துப் போட்டது. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது, சிலது நல்ல நிலத்தில் விழுந்து, நூறத்தனையாய் பலன் கொடுத்தது. எனவே, விவசாயிகளாகிய இங்கு இருக்கும் மக்களுக்குத் தெரியும், வித்தானது நல்ல நிலத்தில் இருக்கும் போது, ஒவ்வொரு வித்தும் பலன் கொடுக்கும் என்று. அவ்விதமே ஒவ்வொரு தேவனுடைய வாக்குத்தத்தமும் சரியான இருதயத்தில் விழும் போது, அது வாக்குத் தத்தத்தை நிறைவேற்றும். உங்களுக்கு இரட்சிப்பு தேவை என்றால், அவர் உங்களை இரட்சிப்பார் என்று விசுவாசித்து, அவருடைய மரணபலியை ஏற்றுக் கொள்ளும் போது, நீங்கள் கேட்டுக் கொண்டது எதுவோ அதை பெற்றுக் கொள்வீர்கள். இன்னும் நீங்கள் விடாய்த்துபோய், மன சோர்வுற்று மற்றும் ஒவ்வொருவரும் உங்களுக்கு விரோதமாய் இருக்கும் போது, "வருத்தபபட்டு, பாரம் சுமக்கிறவர்களே தருவேன்", அது ஒரு விதை. அதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும், என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல்...... நீங்கள் வியாதிப்பட்டுருக்கும் போது, "நம்முடைய மீறுதல்கள்.... குணமானோம்”, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அது ஒரு விதை; அது பலனை கொடுக்கும். 17. நீங்கள் ஒரு விதையை விதைத்து, அது வளருகிறதா என்று தினமும் அதை தோண்டி பார்க்கமாட்டீர்கள். அவ்விதமாய் நீங்கள் செய்வீர்களானால், அது வளரவே வளராது. அதை நீங்கள் விதைத்து, பூமியின் வழிக்கு விட்டு, அதை அப்படியே விட்டுவிடவேண்டும். அதற்கு நீர் வார்த்து, அதை விளையச் செய்யும்படிக்கு பார்ப்பது இயற்கை; தேவனுடைய காரியமாய் இருக்கிறது. அது உண்மை தானே-? எனவே அவ்விதமாகத் தான் நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லா படரும் கொடிகளும், கற்பாறை தன்மைகளும், கல்லான சந்தேகங்களும், நீங்கப்பட்டு, முன்னமே உரமிடப்பட்ட விசுவாசத்தில் செழிப்பான நல்ல நிலமாகிய நல்ல இருதயத்தில் அதை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து அதை விசுவாசித்து, தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்து, தேவன் உனக்கு வாக்குத்தத்தம் பண்ணினதை நான் பெற்றுக் கொண்டேன் என்று அறிக்கை செய்து கொண்டு, தொடர்ந்து செல்லுங்கள். அவர் செய்ததை நீங்கள் அறிக்கையிடும் எந்த காரியத்தையும் நிறைவேற்றுவதற்கு, அவர் தாமே உங்களுடைய அறிக்கையின்... பிரதான ஆசாரியனாய் இருக்கிறார். அது தான் சுவிசேஷம். எனவே, சுவிசேஷம் என்பது வெறுமனே வார்த்தை மட்டும் அல்ல. 18. குளிரில் உறைந்து போய் மரித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, ஒரு நெருப்பின் படத்தை வரைந்து காண்பிப்பேனானால் எப்படியிருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? அவர்களிடத்தில், "அங்கே பாருங்கள், நெருப்பு எரிந்துக் கொண்டிருக்கிறது, அது உங்களுக்கு கதகதப்பாக இல்லையா-? மக்கள் சுற்றி நின்று கொண்டு, குளிர்... ஆனால் ஏதோ ஒன்றின் படமாக மட்டுமே அது இருக்கிறது. அந்த காய்ந்து கொண்டிருப்பதை கவனியுங்கள்”, என்று கூறலாம். படத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருப்பீர்களானால், நீங்கள் அப்படியே உறைந்து போய் மரித்து தான் போவீர்கள். நீங்கள் உண்மையிலேயே சூட்டை பெற்றுக் கொள்ள வேண்டுமானால், அங்கே நிஜமான நெருப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்நாளில் கொடுக்கப்பட்ட சுவிசேஷம், ஒரு வரையப்பட்ட நெருப்பு எப்படியிருக்குமோ, அவ்விதமே அது எழுதப்பட்ட வார்த்தையாக வரலாறாக இருக்கிறது. அவர்கள் ஏற்றுக் கொண்ட அதே விதையை நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது அது ஒரு ஜீவிக்கிற நிஜமானதாய் உங்களுக்குள் இருக்கும். அது அவர்கள் பெற்றுக் கொண்ட அதே அனுபவத்தை உங்களுக்கு கொண்டு வரும். "சங்கை. பிரான்ஹாம், அது உண்மை தானா-?" என்று கேட்கலாம். வேத வசனத்தில் எழுதப்பட்ட விதமே, மதிப்பு மிக்க பரிசுத்த பவுல், "சுவிசேஷம் எங்களிடத்தில் வசனத்தோட மாத்திரமல்ல, ஆனால் வல்லமையோடும், பரிசுத்த ஆவியின் நடத்துதலோடும் செய்து காண்பிக்கப்பட்டது”, என்றார். இயேசு சபைக்கு கட்டளையிட்டு, "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், மாற்கு 16-ல் நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ... விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த அடையாளங்கள் பின் தொடரும்", என்றார். 19. இன்றைக்கு அநேகர் தாங்கள் விசுவாசிகள் என்று அறிக்கையிடுகிறார்கள். இன்றைக்கு, என் சபையிலும், இன்னும் நம்முடைய அனேக சபைகளிலும், சபைக்கு உத்தமமாயும் தொடர்ந்து சபைக்கு வருகிறதும், சபையில் ஒரு பொறுப்பை ஏற்று மற்றும் அதினுடைய பொருளாதார தேவைகளை சந்திக்கிற ஒருவரைத் தான் நாம் விசுவாசி என்று மதிப்பு இடுகிறோம். ஆனால் அது இயேசு கூறினதற்கு முரணாக இருக்கிறது. "சபையில் தங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களையும், சபைக்கு உத்தமமான உறுப்பினர்களாய் இன்னும் அப்படிப்பட்டவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்”, என்று இயேசு கூறவில்லை. அவர் அப்படி கூறவில்லை. இதோ அவர் சபைக்கு கூறின கடைசி வார்த்தை. கவனியுங்கள், "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினால் பிசாசுகளை துரத்துவார்கள், நவமான பாஷைகளை பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது. வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்". 20. அதன் பின் அவர் பரம்ஏறிப் போனார். சீஷர்களும் அவரை வணங்கி, பின்னர் எருசலேமுக்கு திரும்பினார்கள், கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். அது வேத வசனம் தானே-? அவர் கூறினதை அவ்விதமே மேற்கோள்காட்டி (ஒலிநாடாவில் வெற்றிடம்) இப்பொழுது, நான் பொறுப்... அது அர்த்தமுள்ளதாய் இருக்கிறதா-? இல்லை அது அப்படியில்லை. அந்த மனுஷன் எங்கு இருக்கிறான் என்று அவருக்கு தெரியும். அவன் 38 வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்று அவருக்கு தெரியும், கவனியுங்கள், ஒருவேளை அவனுக்கு இருதய கோளாறு இருந்திருக்கலாம். அவனுக்கு மூட்டு வீக்கம் இருந்திருக்கலாம். அல்லது அவனுக்கு காச நோய் இருந்து இருக்கலாம். அவன் ஒரு வேளை இரத்தசோகையினால் அவதிப்பட்டிருக்கலாம். அவனுக்கு வயிறு பிரச்சனை இருந்திருக்கலாம். அது ஒருவகையான வியாதி. அவன் நடக்க முடியாதபடிக்கு அவன் முடவனோ, பாதிக்கப்பட்டவனோ அல்ல உடல் ஊனமுற்றவனோ இல்லை. ஏனெனில் அவன் அவரிடத்தில், "நான் இறங்குவதற்குள், வேறொருவன் எனக்கு முந்தி சென்று விடுகிறான்", என்றான். ஆனால் 38 வருடங்களாக அவதிப்பட்டிருந்த அவன் இடத்தில் இயேசு வந்து, அந்த ஒரு மனிதனை மட்டும் சுகப்படுத்தி, திரளாய் கூடியிருந்த சப்பாணி, குருடர், குந்தி நடக்கிற மற்றும் சூம்பின உறுப்புடையவர்களையெல்லாம் விட்டு கடந்து சென்றார். அது சரி தானே-? இப்பொழுது நான் யோவான் 5-ல் மேற்கோள் காட்டுகிறேன். 21. இப்பொழுது இதை கவனியுங்கள். அன்பானவரும், மகத்தான வல்லமை கொண்டவருமான இயேசுவானவர்; சப்பாணி, குருடர், குந்திகுந்தி நடக்கிற மற்றும் சூம்பின உறுப்புகள் கொண்ட கூட்டத்தின் ஊடாக வந்து, அவர்களை சுகப்படுத்தாமல் கடந்து சென்று, சப்பாணியும், குருடும், குந்திகுந்தி நடக்கிற மற்றும் சூம்பின உறுப்புடையவராய் இராத ஒரு நபரை சுகப்படுத்துவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? ஆனால் அவன் 38 வருடங்களாக வியாதிப்பட்டு படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி, "சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா-?", என்று கேட்டார். அதற்கு அவன், "என்னை குளத்தில் கொண்டு போய் விடுகிறதற்கு ஒருவருமில்லை. நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான்", என்றான். அதற்கு அவர், "உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட", என்றார். உடனே அவன் தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து போனான். அதன் பிறகு தேவனுடைய இருதயத்தை தன்னுள் கொண்ட, இயேசுவோ, சப்பாணி, குருடர், குந்திகுந்தி நடக்கிற மற்றும் சூம்பின உறுப்புடைய திரளாய் கூடி இருந்தவர்களை அப்படியே விட்டு சுகப்படுத்தாமல் கடந்து போனார். அது வேத வசனம், இங்குள்ள வேதாகமத்தில் பரிசுத்த யோவான் சுவிசேஷத்தில் அது இருக்கிறது. இது ஒரு மதவெறித்தனம் அல்ல, ஆனால் இது சத்தியம் என்று எல்லோருக்கும் தெரியும், ஏனெனில் இங்குள்ள வேதாகமத்திலிருந்து அதை உங்களுக்குப் படித்துக் காண்பித்திருக்கிறேன். எனவே நீங்கள், "ஆமென்" என்று சொல்வீர்களா-! 22.முடிவில்லா அன்பும், கிருபையும் கொண்ட அந்த மாசில்லாத தேவ குமாரன், அங்கு திரளாய் கூடியிருந்த அம்மக்கள் இருந்த இடத்திற்குச் சென்று, அவர்களை சுகப்படுத்தாமல் ஏன் கடந்து சென்றார் என்று ஆச்சரியப்படுகிறேன். ஆனால், நான் விசுவாசிக்கிறேன், அவர் அந்த முடவன் அல்லது சூம்பின உறுப்புடையவர்கள் அல்லது இந்த குருடனையோ பார்த்து பேசியிருப்பாரானால் அவருடைய இருதயம் அவர்களுக்காக பரிதபித்திருக்கும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அவர்களுக்காக அவருடைய இருதயம் பரிதபித்திருக்கும். எனவே அவர்களில் ஒருவரை அவர் நோக்கி, "நீ எழுந்து, நட என்று அல்லது நீ உன் பார்வையை பெற்றுக் கொண்டாய்”, சொல்லி இருப்பாரானால், அது அவ்விதமே நடந்து இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? இப்பொழுது கீழ்கண்ட வசனங்களை நான் படிக்கும்போது நீங்கள் அதை கவனியுங்கள், 19-ம் வசனத்தில் அவரிடத்தில் கேள்வி கேட்ட போது, மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையே அன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார், அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரன் இடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளை எல்லாம் இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் அவருக்குக் காண்பிக்கிறார். நீங்கள் ஆச்சரியப் படத்தக்கதாக காண்பிப்பார். நான் என்ன சொல்லுகிறேன்; உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா-? 23. தேவ குமாரனாகிய இயேசு, "தேவ குமாரனாகிய நான், அதைக் குறித்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, ஆமென் அவைகளையே குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரன் இடத்தில், தாம் செய்கிறவைகளையெல்லாம் காண்பிக்கிறார், நீங்கள் ஆச்சரியப் படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்", பரிசுத்த யோவான் 14:12ல் இயேசு மேற்கோள் காட்டுகிறார். "நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்". நான் திரும்பவும் வேத வசனத்தை மேற்கோள் காட்டட்டும். "நான் போவது உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும், நான் போகவில்லை என்றால் பரிசுத்தாவியானவர் உங்கள் இடத்திற்கு வரமாட்டார்”. மேலும், "கொஞ்சகாலத்திற்கு உலகம் என்னைக் காணாது, ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உங்களுக்குள்ளே இருப்பேன்", இன்னும் "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்”, என்று எபிரெயர் 13:8 குறிப்பிடுகிறது. "பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்திற்கு வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும், வெளிச்சத்திலும் வழிநடத்தி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குக் காண்பிப்பார்”. உண்மை தானே-? இயேசு தன் வாயினால் கூறின வேத வார்த்தைகளின் மேற்கோள்கள் இவை. 24. அப்படியென்றால், இன்றைக்கு நம் கண்களுக்கு முன்பாக இயேசுவின் வார்த்தைகள் நிறைவேறுவது புதியதாய் இருக்கிறதா-? அவிசுவாச மக்களும் இது பிசாசு என்று சொல்வது இன்றைக்கு புதிதானதா-? இல்லை, இயேசு மறுபடியும் மேற்கோள்காட்டுகிறார், "வீட்டு எஜமானையே, தேவனுடைய வீட்டின் எஜமானனான அவரையே, பிசாசுகளின் தலைவன் என்றழைக்கப்படும் பெயல்செபூல் என்று அழைப்பார்களானால், அவருடைய வீட்டாரை எவ்வளவாக அழைப்பார்கள். முக்கிய ஆசாரியனும், பிரதான ஆசாரியனும், தீர்க்க தரிசிகளுக்கெல்லாம் தீர்க்கதரிசியும், இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவுமான அவரை அவர்கள் அழைப்பார்களானால் மேலும் எல்லா வல்லமைகளுக்கும் மேலான வல்லமை உடையவராயிருந்தும், அவருடைய கிரியைகளை நடப்பித்தார், ஏனெனில் அவர் ஒரு ஞான திருஷ்டிகாரரும், மற்றும் இருக்கிற, இதற்கு முன் இருந்த, வரப்போகிற ஞான திருஷ்டிகாரர்களுக்கு எல்லாம் முதன்மையானவரும், அவற்றிற்கெல்லாம் தலையானவரும் அவையாவற்றையும் உற்பத்தி பண்ணினவருமான அவரையே பெயல்செபூல் என்றும் பிசாசுகளுக்கு தலைவன் என்றும் அவர்கள் அவரை அழைப்பார்களானால், அவருடைய வீட்டாரான சிறிய... எவ்வளவாக அழைப்பார்கள்-! ஞானதிருஷ்டிக்காரர்களை பிதாவையே பிசாசு என்று அழைப்பார்களானால், "அவருடைய பிள்ளைகளை பிசாசு என்று எவ்வளவாக அழைப்பார்கள். நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா-? 25. எனவே, என் அன்பான நண்பனே, கிறிஸ்து எப்பக்கம் நிற்கிறாரோ அப்பக்கமாக நிற்கும் படிக்கு நீங்கள் இன்றிரவு தீர்மானம் எடுக்கும்படிக்கு உங்களை கேட்டுக் கொள்கிறேன். உண்மையிலே அவர் எப்பக்கமாக இருந்து தன்னை நிரூபித்துக் காண்பிக்கிறாரோ அப்பக்கமாக நீங்கள் நில்லுங்கள். இப்பொழுது, அதை என் இருதயத்திலிருந்து குறிப்பிடுகிறேன். இந்நிகழ்வுகள் மறை முகமாக நடைபெறவில்லை. எல்லோரும் பார்க்கும் வகையில், இவை வெளிப்படையாக நடந்தது. அது ஏதோ உலகத்தின் ஒரு பகுதியில் நடைபெறவில்லை. அது உலகமெங்கும் நிரூபிக்கப்பட்டது, அதை மறுபடியும் அவர் நிரூபிப்பார். இந்நாட்களில் நிறைவேறும் என்று தீர்க்கதரிசனமாக உரைத்தபடியே, அது நிறைவேறும்படிக்கு இவ்விதமாக இக்காரியங்கள் செய்யப்பட்டது. 26. இங்கே நான் தேவனுடைய ஆவியை உணருகிறேன். கவனமாக கேளுங்கள். இது ஒரு மகிமையான காரியம். இது கர்த்தருடைய நாளாய் இருக்கிறது. இது தாமே நாம் சந்தோஷ மாய் இருக்கின்ற நாளாய் இருக்கிறது. ஏனெனில், கர்த்தர் உரைத்த வண்ணமே, தேவனுடைய வார்த்தை நம் கண்கள் காணும்படியும், காதுகள் கேட்கும்படிக்கும் நம் முன்பாக நிறைவேறினது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. அவருடைய வார்த்தையின் நிரூபனமாக பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார், இது அதின் நிறைவேறுதலாயிருக்கிறது. எனவே, ஏற்கனவே முன்னுரைக்கப்பட்டு, முன் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமானது இன்று இரவு, பென்சில்வேனியாவில் இருக்கும் ஈரியில் உங்கள் கண்களுக்கு முன்பாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இந்த வார்த்தைகளை எழுதின பரிசுத்த ஆவியானவர், விதையாகிய வார்த்தையில் கூறப்பட்டபடி தேவனுடைய சத்தியத்தையும், வார்த்தையின் நிறைவேறுதலையும் ஆயுதசாலை கட்டிடத்தில் இருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார். அப்படியானால் நம் இருதயத்தில் நாம் களிகூர்ந்து, தைரியங் கொள்வோம். மேலும் நாம் நிமிர்ந்து உட்கார்ந்து, நாம் கேட்டதற்கு ஜாக்கிரதையாக செவி கொடுத்து, எந்த நேரத்திலும் இதை நழுவ விடாதிருப்போமாக. ஏக சிந்தையோடும் ஏக இருதயத்தோடும், அவர் மேல் நாம் விசுவாசம் கொள்வோம். நாம் வரம்புக்குரியவர்கள், நானும் வரம்புக்குரியவன், பிதாவானவர் எதை காண்பிக்கிறாரோ அதையே அல்லாமல் வேறொன்றையும் என்னால் செய்ய முடியாது, ஏனெனில் கர்த்தராகிய இயேசு கூறின வார்த்தைகளை மட்டுமே நான் நிறைவேற்றுகிறேன். 27. இயேசு, அவர் வந்த போது, தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றும்படிக்கே தான் வந்தேன் என்று கூறினார். அதை சொல்வதற்கு எப்படிப்பட்ட தீர்க்கதரிசியாக அவர் இருக்க வேண்டும்-! ஆமென். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்கு அவர் வந்தார். அதை விசுவாசிக்கிறீர்களா-? இப்பொழுது புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும்படிக்கு பரிசுத்தாவியானவர் இங்கே இருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா-? எனவே நாம் மகிழ்ந்து களிகூறுவோம், காரணம் இன்று கர்த்தருடைய பெரிதான நாளாய் இது இருக்கிறது. வியாதிப்பட்டு, துயரப்பட்டிருக்கிறவர்களே நீங்கள் சோர்ந்து போக வேண்டாம். இருதயம் சோர்ந்து போனவர்களே, நீங்கள் சோர்ந்து போக வேண்டாம். மேலும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும், தூக்குப் படுக்கையிலும் (STRETCHERS), கட்டிலிலும் இருக்கிற உங்களுக்கும் தான். மருத்துவ விஞ்ஞானத்தின்படி நீங்கள் சுகம் அடையாமல் மருத்துவர்களும் உங்களுக்கு உதவிடும்படிக்கு, தங்களால் போகலாம். மதிப்பிற்குரிய முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்திருக்கலாம், ஆனால் என்னைப் போல் அவர்களும் மனிதர்களே. எனக்கு மட்டும் கொஞ்சம் அதிகாரமோ அல்லது வல்லமையோ இருந்து இருந்தால், என்னுடைய பிரசங்கபீடத்தை விட்டு நான் கீழே வந்த சில நிமிடங்களுக்குள் ஒரு நோயாளியும் சுகவீனமாயிராதபடிக்கு செய்துவிடுவேன் என்று தேவனுக்குத் தெரியும். நிச்சயம் அதை நான் செய்வேன். மேலும் என்னுடைய எஜமானரும் பெதஸ்தா குளத்தண்டை சென்று முடமானவர்கள், துன்பப்படுபவர்கள், குருடர் என ஆயிரக் கணக்கான மக்களை அங்கே காணும்போது அவரும் அவ்விதமே செய்திருப்பார். என் பிதா காண்பிக்கிறதையே அன்றி வேறொன்றையும் நான் செய்வதில்லை என்று அவர் சொன்னார். 28. எனவே ஒவ்வொரு மானிடரும், தேவனுடைய வல்லமைகளின் கட்டுக்குள் இருக்கிறார்கள். ஏனெனில் எந்த மாம்சமும் தேவகுமாரனும் கூட பிதாவுக்கு முன் பெருமை பாராட்டாதபடிக்கு, "கிரியை செய்வது நானல்ல, எனக்குள் வாசமாயிருக்கும் பிதாவே கிரியைகளை செய்கிறார். தான் செய்வதை குமாரனுக்கு காண்பிக்க, குமாரனும் அவ்விதமே செய்கிறார்”, என்றார். அதே தேவனால் அருளப்பட்ட அதே சுவிசேஷம் இன்று இரவு இங்கே பிரசங்கிக்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் ஆப்பிரிக்கா தேசத்துக்கு போக இருக்கிறோம். ஒரு வகையில், அங்கே போவதற்கு எனக்கு விருப்பமில்லை. என் மனைவி, பிள்ளைகள் மற்றும் எல்லோரையும் விட்டு பிரிவதற்கு எனக்கு விருப்பமில்லை. அன்றொரு காலைப்பொழுது நான் ஒரு உணவு விடுதியில் இருந்த போது, ஒரு சீமாட்டி என்னிடம், "உங்கள் அருமை மனைவி பிள்ளைகளை விட்டு, ஆப்பிரிக்காவுக்கு போக இருக்கிறீர்களா-?” என்றாள். நான், "ஆம், சீமாட்டியே”, என்றேன். அவள், "எதற்காக ஆப்பிரிக்கா போகிறீர்கள்”, என்றாள். நான், "இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவே”, என்றேன். மேலும், நான், "தன் மனைவியையாவது, தன் பிள்ளைகளையாவது, மற்ற எவரையும் விட்டுவிடாமல், என்னைப் பற்றிக் கொள்கிறவன் எனக்கு சீஷனாய் இருப்பதற்கு பாத்திரன் அல்ல என்று அவர் கூறியிருக்கிறார்”, என்றேன். இன்னும், “அவரே மகிமையை விட்டு கீழே வந்து, எனக்காக மரித்தார் என்பதை ஒப்பிடும் போது, என் அன்பான மனைவியையும், பிள்ளைகளையும் மற்றவைகளையும் விட்டு விடுவது என்பது அவ்வளவு ஒரு சிறிய காரியமே", என்றேன். பின்னர் அவள் சென்று, என் காலை உணவை எடுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் திரும்பி வந்து, "ஐயா, இவ்விதமாய் நினைப்பவர்கள் இன்று கொஞ்ச மக்கள் தான்", என்றாள். நண்பர்களே, உலகம் பசியாய் இருக்கிறது. அவர்களுக்கு சுவிசேஷத்தை அதின் உண்மையிலும், வல்லமையிலும் கொடுத்திடுங்கள். ஆப்பிரிக்கா தேசத்துக்கு பச்சை விளக்கு பிரகாசிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. 29. கர்த்தருடைய தூதனின் புகைப்படம் எடுக்கப்பட்ட அன்று இரவில் நான் அங்கே ஹூஸ்டனில் இருந்தேன். அந்த படம் எடுக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், டாக்டர்.பாஸ்வர்த் என்னிடத்தில் வந்து, "இங்கே கவனியுங்கள் சகோதரன் மறைந்த ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் கொள்ளு பேத்தியின் பிரான்ஹாம்”, என்றார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற செவிலியரான புகைபடத்தை வைத்திருந்தார். அது கொள்ளு பேத்திக்கும் முந்தின பேத்தி என்று நான் விசுவாசிக்கிறேன். அவள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தாள், அவளுக்கு வயிற்றின் மேற்... (வார்த்தை தெளிவாக கேட்கப்படவில்லை) புற்றுநோய் வளர்ச்சி இருந்தது. புற்றுநோய் அவளை தின்று போட்டதினால், எலும்பும் தோலுமாய் மட்டுமே இருந்த அவளை அவர்கள் தாங்கி நிற்க வைத்திருந்தார்கள். இவ்விதமாக அவளை நிற்க செய்திருந்தார்கள், ஏறக்குறைய ஆறடி உயரமும், ஒல்லியாகவும், பொன்னிற தலை முடியுடையவளாய் இருந்தாள். அவள் அவ்விதமாக நின்று கொண்டிருந்தாள், அவளுடைய கரங்களின் சுற்றளவு அவ்வளவு சின்னதாக இருந்தது. 40 அல்லது 35 பவுண்டுகள் அல்லது ஏதோ அந்த அளவுக்கு எடையுடையவளாய் இருந்தாள். அவள் உடல் முழுவதும், இன்னும் இங்கேயும், ஆடைகளை பாதுகாக்கும் மேல் ஆடையை அணிந்திருந்தாள். எனவே அவர் எனக்கு அவளுடைய புகைப்படத்தை காண்பித்த போது... அவள் அங்கிருந்து எனக்கு ஒரு விமான டிக்கெட்டை அனுப்பி, ஆப்பிரிக்காவுக்கு உடனடியாக வரும்படிக்கு என்னை கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். 30. நான் வீட்டிற்கு போனதும், சில நேரங்களில் அங்கே 8 அல்லது 10 வெவ்வேறு இடங்களிலிருந்து அனுப்பப்பட்ட பயணச்சீட்டுகள் இருக்கும். அப்பொழுது நான் முழங்காற்படி இட்டு, எந்த இடத்திற்கு போகவேண்டும் என்று கர்த்தரிடத்தில் ஜெபித்து கேட்பேன். பின்னர் மற்றவைகளை திருப்பிக் கொடுத்துவிடுவேன். எனவே கர்த்தர் என்னை எங்கே போகும்படிக்கு வழிநடத்துகிறாரோ அங்கே போக முயல்வேன். ஒரு வழியில் அது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அது அவ்வளவு இனிமையானது. ஏனெனில் இரவு நேரத்தில் நீங்கள் படுக்கைக்கு சென்று தலையணையில் உங்கள் தலையை வைத்து, எவரோ ஒருவருக்காக அவ்வளவாக இகழ்ச்சியை பொறுத்துக் கொண்டு, அவ்வளவாக சிலுவையை சுமந்து, எவரோ ஒருவருக்கு உங்களால் முடிந்த சிறந்த வகையில் குறிப்பிட்ட காரியத்தை செய்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் போது அது ஒரு பொருட்டாகவே இருக்காது. உலகம் முழுவதும் விடுதலை பெற, இயேசு மட்டும் தன்னந்தனியாய் சிலுவையை சுமக்க வேண்டுமா-? என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொருவரும் சுமப்பதற்கென்று அவர்களுக்கான சிலுவை உண்டு, அவ்விதமே எனக்கு ஒரு சிலுவை உண்டு. நண்பனே, இவையாவும் ஏதோ ஒரு இலகுவான பூ மெத்தை அல்ல. ஏனெனில் இரவு நேரங்களில் நீங்கள் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். எப்படியெனில் பிசாசு பிடித்த மக்களிடத்திலிருந்து அவைகள் வெளியே போகும்படிக்கு கட்டளையிடப்படும் போது, அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட அந்த நபர் விசுவாசிக்கும் போது அவை உங்களுடன் போராடும், அதன் பின்னர் இரவில் அவை உங்களை அடிக்கடி அவ்விதமாக தொல்லைப்படுத்தும். நீ என்ன செய்கிறாய் என்பதை அறிந்திருப்பது நலமாகும். 31. அவர்கள் அந்த புகைப்படத்தை கொடுத்தபோது, சகோதரன் பாஸ்வொர்த், “சகோதரன், பிரான்ஹாம் இதைத்தான் என்னால் உங்களிடத்தில் கொடுக்க முடிகிறது”, என்றார். அதை வாங்கினதும் ஒரு குழந்தையைப் போல நான் அழுதேன். நான் பாரத்தோடு தரையில் முழங்கால்படியிட்டு தந்தி மூலம் அனுப்பப்பட்ட கடிதங்களை முக்கியமாக அந்த புகைப்படத்தை வைத்து, நானும் என் மனைவியும் என் சிறு மகளும் அந்த புகைப்படத்தின் அருகில் முழங்கால் படியிட்டு, ஒன்று கூடி ஜெபித்தோம். நான், "பரலோகப் பிதாவே, இப்பொழுது மனித ரீதியில் பார்க்கும் போது மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கும் போது என்னால் இவ்விடத்தை விட்டு செல்ல முடியாது என்பதை நீர் அறிவீர்”, என்றேன். "இருப்பினும் நீர் மட்டும் அந்த பரிதாபமான, அன்பான, ஆப்பிரிக்காவில் மரணத்தருவாயில் இருக்கும் அந்த பெண்ணை தொட்டு சுகப்படுத்துவீரானால், அது நான் அங்கே போவதற்கான அடையாளமாக நீர் காட்டுகிற 'போ' என்கிற விளக்காக அது இருக்கும், நீர் அவளைத் தொட்டு சுகப்படுத்தும்”, என்றேன். "அதற்கு மேல் என்னால் அதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாது. நான் இப்பொழுது கூட்டத்தை விட்டு போக இருக்கிறேன், நான் ஏதாவது செய்ய நீர் விரும்புகிறீரா, பிதாவே", என்றேன். தேவன் சில சமயங்களில் இவ்விதமாய் செய்கிறார். நீங்கள் பிலிப்பை நினைவு கூறுகிறீர்களா-? எனவே நான் அதை தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்து, அந்த புகைப் படத்தையும் திருப்பி டாக்டர் பாஸ்வொர்த்தினிடத்தில் கொடுத்து விட்டேன். பின்னர் நான் தொடர்ந்து சென்றேன். 32. இங்கே ஃபோர்ட் வெயினில் உடலில் பல இடங்களில் தசைகள் கடினப்பட்டுபோதல் (SCLEROSIS) நோயினால் பாதிக்கப்பட்டு பத்து வருடங்களாக படுத்த படுக்கையிலிருந்த ஒரு மனிதன் சுகமானான், அவன் இங்கிலாந்து இராஜாவின் தனிப்பட்ட ஜெபிக்கும்படிக்கு தன்னிடத்தில் வரும்படிக்கு எனக்கு இரண்டு காரியதரிசியின் நண்பர், அதை அவர் கேள்விபட்டு, தனக்காகவும் அப்பொழுது என்னால் அங்கே போகமுடியவில்லை, ஆனால் முறை தந்தி அனுப்பினதை நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இங்கிலாந்துக்கு வெகு விரைவில் செல்வேன் என்று இப்பொழுது நான் அறிவேன். எனவே இராஜாவை குறித்த காரியத்தினிமித்தம் நான் ஜெபத்தை ஏறெடுத்தேன். நான், சகோதரன் பாக்ஸ்டர் மற்றும் அங்கே கூட்டத்திற்கு போகும்படிக்கு அமெரிக்க பணத்தை கொடுத்து உதவி செய்தவர்களும் அங்கே தரையிறங்கின அந்நாளில், எனவே நாங்கள் இங்கிலாந்தில் தரையிறங்கினதும், அதை என்னால் மறக்கமுடியாது, நான் சகோதரன் பாக்ஸ்டரிடத்தில், "சகோதரன் பாக்ஸ்டர், இந்த மிகவும் கடினமான பணிக்கு செல்வதற்கு முன்னால் இப்பொழுது சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்”, என்றேன். காரணம், ஃபின்லாந்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டு இருப்பார்கள், என்று நாம் அறிவோம். 33. எனவே கர்த்தருக்கு சித்தமானால், நாளை இரவு, ஃபின்லாந்தில் என்ன நடந்தது என்பதை கூறுவேன். இப்பொழுது நமக்கு நேரம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. எனவே நான் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தவுடன், லண்டனுக்கு வெளியே கிட்டத்தட்ட 20 மைல்கள் தூரத்திலிருந்த அந்த பன்னாட்டு விமான நிலையத்தில் யாரோ ஒருவர் என் பெயரை உரத்த சத்தமாக அழைப்பதை கேட்டேன். சகோதரன் பாக்ஸ்டர், "சகோதரன் பிரான்ஹாம் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்”, என்றார். பின்னர் அங்கே முன்னோக்கிச் சென்றார். அங்கே ஊழியக்காரர்கள் என் பெயரைக் கூறி, என்னை அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள், "இங்கே இப்பக்கம் வாருங்கள். அந்த பெண் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் இப்பொழுது தான் ஆப்பிரிக்காவிலிருந்து விமானத்தில் வந்து உங்களுக்கு முன்பாக இருக்கும் விமானத்தில் இருக்கிறாள். அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள். எனவே நீங்கள் அவளிடத்தில் வரவேண்டும் என்று அவள் விரும்புகிறாள்", என்றனர், ஓ, நான் எப்படி அவளிடத்தில், அங்கே அவ்வளவு கூட்டத்தார் மத்தியில் செல்வேன் என்று எண்ணினேன், எனவே நான் அவரிடத்தில், நான், "நீங்கள் அவளை உங்கள் வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள். நான் பக்கிங்காம் மாளிகைக்கு செல்ல வேண்டியதாய் இருக்கிறது. அதன் பின் நீங்கள் என்னை கூப்பிடுங்கள், நான் அங்கே பிக்காடில்லி விடுதியில் இருப்பேன்”, என்றேன். எனவே நானும், சகோதரன் பாக்ஸ்டரும் அவரிடத்தில் காரியத்தை சரிசெய்து விட்டு, நாங்கள் விடுதிக்குச் சென்று விட்டோம். 34. எனவே இரண்டாவது நாள், அரண்மனைக்குச் சென்ற பிறகு, அங்கிருந்து ஜான் வெஸ்லி கல்லறை இன்னும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று, நாங்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு திரும்பி வந்தோம். அதன்பிறகு நாங்கள் விடுதிக்குத் திரும்பி விட்டோம். அதன் பின் இந்த ஊழியக்காரர், ஆங்கில ஊழியக்காரர், தன் சிறிய வாகனத்தில் எங்களை சந்திக்க வந்தார். நாங்களும் அவருடைய வீட்டிற்குச் சென்றோம், அது தாமே பனிமூட்டமான காலை நேரமாக இருந்தது. பின்னர் நாங்கள் தொடர்ந்து சென்று... அவருக்கு அருமையான வீடும், பெரிய சபையும் இருந்தது. நாங்கள் தொடர்ந்து மேலே படியேறிச் சென்றோம், அங்கே எங்களை வரவேற்க்கும்படிக்கு அநேகர் இருந்தனர். 35. ஓ-! சகோதரனே, சகோதரியே என்னுடைய சிறிய புத்தகத்தை நீங்கள் படித்திருப்பீர்கள், அதில் சொல்லப்பட்ட அந்த பரிதாபமான ஜார்ஜி கார்டர், அவள் 30 பவுண்டுகள் தான் எடையைக் கொண்டிருந்தாள். ஒன்பதரை வருடங்கள் அசைவற்றவளாய் இருந்தாள். ஒன்பது வருடங்கள் எட்டு மாதங்களுக்கு எழுந்திருக்க முடியாமல் அவள் இருப்பதைக் கண்டு, நான் பார்த்ததிலேயே மிகவும் பரிதாபமான நபர் இவளாகத் தான் இருக்கக்கூடும் என்று எண்ணினேன். இன்றிரவு, நான் மேய்ப்பராய் இருக்கும் மில் டவுன் பாப்டிஸ்டு சபையில் எனக்கு அவள் பியானோ இசைப்பவராக இருக்கிறாள். ஆனால்... அவள் வீட்டு அக்கம் பக்கத்திலிருப்பவர்கள், முதலில் அவள் சுகமடையட்டும், பின்னர் நாங்கள் எல்லோரும் விசுவாசிக்கிறோம்", என்றார்கள். ஆனால் அது ஒரு விசுவாசியையும் கொண்டு வரவில்லை, அவள் மந்திரத்தால் கட்டுப்படுத்தப்பட்டும், வசியம் செய்யப்பட்டிருக்கிறாள் என்று அவர்கள் நினைத்தார்கள். இது பல வருடங்களுக்கு முன்பாக நடந்தது, அப்பொழுதில் இருந்து அவள் இன்னும் ஒரு காரியத்தால் கட்டுப்படுத்தப்பட்டும், வசியப்பட்டவளாயும் இருக்கிறாள். அதன்பிறகு அவள் கிட்டத்தட்ட நூறு பவுண்டுகள் எடை கூடியிருந்தாள். 36. பின்னர், இந்த பெண்னை பார்க்கும்படிக்கு நாங்கள் உள்ளே சென்ற போது, சகோதரன் பாக்ஸ்டர் அவளை பார்த்ததும் தன் முகத்தை திருப்பிக் கொண்டார். அந்த பரிதாபமான பெண்னை பார்க்கிற அளவுக்கு அவரால் அங்கு நிற்கக் கூட முடியவில்லை. நானும் கூட அவளை பார்த்த போது, என்னுடைய இருதயமே (பாரத்தினால்) வீங்கி விடும் என்று நினைத்தேன். அவள் என்னிடத்தில் பேசினதை என்னால் கேட்க முடியாத அளவுக்கு அவள் அவ்வளவு பெலவீனமாயிருந்தாள். எனவே அவள் சொல்வதை கேட்கிற அளவுக்கு நான் மிகவும் தாழ்வாகச் சென்றேன், அப்பொழுது செவிலியர்களில் ஒருவர் என்னிடத்தில் அவள் பேசினதை மொழிபெயர்ப்பு செய்தாள். அவள், சகோதரன். பிரான்ஹாம், "உங்களுடைய கரத்தை தொட நான் விரும்புகிறேன்”, என்றாள். ஓ, நண்பர்களே, இயேசு அவருடைய சபைக்கு வருவது தாமதமானால், நாமெல்லாரும் இவ்விடத்தை விட்டு கடந்து போக வேண்டும். பின்னர் நாம் இந்த பூமியின் மண்ணுக்குத் திரும்ப வேண்டும், ஏனெனில் நாம் அவ்விதமாகத் தான் செல்ல வேண்டும் என்று தேவன் நமக்கு நியமித்து இருக்கிறார். அவளுடைய கையை நான் பிடித்த போது, என்னால் நம்பவே முடியவில்லை. (என் இருதயத்திலிருந்து கூறுகிறேன்) அது ஒரு எலும்புக் கூட்டின் கையே அல்லாமல் வேறு ஓன்றும் இல்லை; ஏனெனில் அது அவ்வளவு குளிர்ந்து போய், வெறுமனே ஒரு எலும்பாகத் தான் இருந்தது. எனவே அவளுடைய கையை நான் பிடித்த போது, அவளுடைய கரம் வெறுமனே எலும்புக் கரமாகத் தான் இருந்தது. 37. அவள் தன் உடம்பை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். இப்பொழுது, நான் இந்த அறிக்கையை கூற விரும்புகிறேன், நான்... இங்கே பலதரப்பட்ட கூட்டத்தார் இருக்கிறர்கள். உங்கள் சகோதரன் என்ற முறையில், இதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறேன். அவள் மேல் போடப்பட்டிருந்த விரிப்பை அவர்கள் எடுத்தவுடன், அவள் ஒரு மனித ஜீவியைப்போல காணப்படவில்லை, வெறுமனே ஒரு எலும்புக் கூடாகத்தான் காணப்பட்டாள். ஒரு சீமாட்டி என்ற பட்சத்தில், எப்படி அவர்கள் மார்பு அமைப்பு இருந்து இருக்கும். எல்லாமே வற்றிப்போய் வெறுமனே விலாஎலும்புகள் மட்டும் காணப்பட்டது. அவளுடைய உடல் அவ்வளவு பரிதாபமான நிலையில் இருந்தது, எப்படி எனில் அவளுடைய இடுப்பு எலும்புகளில், இடுப்புவளைவு இருக்கும் இடத்தில், தோலானது வளையத்தினூடாக இவ்விதமாக வளர்ந்திருக்கும். இங்கே மேலே குழியில் (socket) இணைகிற கால்கள் அந்த அளவுக்குத்தான் இடத்தில், அவளுடைய பெரிதாக இருந்தது. எப்படி அந்த பெண் ஜீவிக்கிறாள் என்பதை நம்முடைய பரலோகப் பிதா மட்டும் தான் அறிவார். அவள் அழுது கொண்டிருந்தாள், அவளுடைய கண்ணத்தின் ஓரத்தில் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. கண்ணீர் வருகிற அளவுக்கு, அவளுக்கு எங்கிருந்து தான் ஈரப்பதம் வருகிறதென்று எனக்கு தெரியவில்லை. அவளுடைய கால்கள் அவ்வளவு பெலவீனமாக, வெறுமனே எலும்பு மட்டும் தான்; அவள் அவ்விதமாகத்தான் இருந்தாள், அதின் வழியாகத்தான் குளுக்கோஸ் மற்றும் ஊட்டச்சத்துகளை செலுத்தி அவளை போஷித்தார்கள், ஏனெனில் பல மாதங்களாக அவளால் திட உணவை விழுங்கமுடியவில்லை. 38. பின்னர் அந்த செவிலியர் கீழே குனிந்து அவள் என்ன சொல்கிறாள் என்று கேட்டாள். அவள், "நான் மரித்து போகும்படிக்கு சகோதரன் பிரான்ஹாமிடத்தில், சொல்லுங்கள். எனக்கு மரணம் நேரிடாமலிருக்கிறது”, என்றாள். அவர்களால் இரத்த நாளங்களையும் என்னிடத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அவ்வித நிலையில், அப்படியே படுத்துக் கொண்டு, நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள். சகோதரன் பாக்ஸ்டர், சகோதரன் லின்ட்சே, சகோதரன். மூர், நான் இரண்டு அல்லது மூன்று ஊழியக்காரர்கள், செவிலியர்கள் மற்றும் அவளுடைய வீட்டின் அன்பானவர்கள் அங்கிருந்தார்கள். நான், "நாம் ஜெபம் செய்வோம்”, நாம் ஜெபிக்க தலை வணங்குவோம் என்றேன். எனவே நான் ஜெபிக்கத் துவங்கினவுடன்..." என் வேதாகமம் இப்பொழுது எனக்கு முன் திறந்திருக்கிறது. நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதையும் மற்றும் நீங்கள்... தம்முடைய பரலோகப் பிதாவே இங்கே அருகில் இருக்கிறார். எனவே நான் ஜெபிக்க துவங்கி, "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே", என்று கூறினவுடன், ஒரு சிறிய புறா அங்கிருந்த ஜன்னலண்டை பறந்து வந்தது. கூகூ என்று சத்தமிட்டு, முன்னும் தான் ஜெபித்து கொண்டிருந்த முழு நேரமும் அது சத்தமிட்டு... பின்னும் நடந்து கூகூ என்று சத்தமிட்டு கொண்டிருந்தது. பின்னர் நான் எழுந்தவுடன், ஊழியக்காரர்கள் என்றார்கள். எனவே நான் நிற்க எழும்பினவுடன், அந்த புறா என்னிடத்தில், "நீங்கள் அந்த புறாவை கவனித்தீர்களா-?", என்று கூறின... எனவே இன்றிரவு நீங்கள் பார்ப்பீர்களானால், பறந்து சென்று விட்டது. நான் அந்த புறா சத்தமிட்டதை கேட்டேன் நான் என்ன சொல்லப் போகிறேன் என்று எனக்கே என் மீது கட்டுப்பாடு இல்லை. எனவே நான், "கர்த்தர் உரைக்கிறதாவது, நீங்கள் பிழைப்பீர்கள், மரிக்கப் போவதில்லை”, என்றேன். 39. அவள் எங்களுக்கு எழுதின கடிதம் இப்பொழுது எங்களிடத்தில் இருக்கிறது. 135 பவுண்டுகள் எடையுள்ளவளாய்; பரிபூரணமான, நல்ல ஆரோக்கியத்தில் இப்பொழுது இருக்கிறாள். என் காரியதரிசியின் மனைவி இங்கே அமர்ந்திருக்கிறாள், எலும்பும் தோலுமாக காணப்பட்ட மற்றும் எல்லா மருத்துவர்கள் கொடுத்த அப்பெண்ணின் படங்களின் சேகரிப்பிலிருந்து, வித்தியாசமாக காணப்படுகிற படத்தை எனக்கு அனுப்பியிருந்தாள், அது அவள்தானா என்று உங்களால் கண்டுபிடிக்கக்கூட முடியாது. அது என்ன-? அது என் ஜெபத்தின் பலனா-? இல்லை, 1900 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு அவளுக்கு செய்ததின் பேரில் வைத்த அவளுடைய விசுவாசம் தான் காரணம், 1900 ஆண்டுகளுக்கு முன்னர் பாவத்திலிருந்தும் குற்ற உணர்வின் மனநிலையில் இருந்தும் இரட்சிக்கப்பட்டதால், நீங்கள் தேவனிடத்தில் ஐக்கியத்துக்குள்ளாக கொண்டு வரப்பட்டு இருக்கிறீர்கள். ஏதோ கடந்த இரவு அல்லது கடந்த வருடம் இயேசு உங்களை இரட்சித்ததால் அது நிகழவில்லை, ஆனால் அவர் ஏற்கனவே உங்களுக்கு செய்ததை நீங்கள் அந்த சமயத்தில் ஏற்றுக் கொண்டது தான் காரணம். "நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு அவருடைய தழும்புகளால் குணமானோம்", 40. எனவே, அப்பொழுது அவர் உனக்கு செய்ததை இப்பொழுது நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்பொழுது அவர் தான் எபிரெயர்.3:1. நம்முடைய அறிக்கையின் (confession) பிரதான ஆசாரியராய் அவர் இருக்கிறார். இப்பொழுது வேத வசனத்தை அறிந்த எவருக்கும் தெரியும் இந்த வார்த்தை "profession” என்று எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியும், ஆனால் இதே வார்த்தை "confession” என்று மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியும். இன்னும் தெளிவான வார்த்தைகளில் கூறுவோமானால், நீங்கள் செய்யும் ஜெபத்தின் பலனால் அவர் உங்களை இரட்சிப்பதில்லை. இன்னும் உங்கள் உற்சாகத்தில் அல்லது நற்கிரியைகளின் பலனாலும் அவர் உங்களை இரட்சிப்பதில்லை. ஆனால் அவர் உங்களின் விசுவாசம் மற்றும் உங்கள் அறிக்கையின் பலனால் அவர் உங்களை இரட்சிக்கிறார். ஏனெனில் மனுஷர் முன்பாக நீங்கள் என்னை அறிக்கை செய்யும் போது, அவனை நானும் என் பிதா மற்றும் பரிசுத்த தூதர்கள் முன் அறிக்கை செய்வேன் என்றார். கூர்ந்து கவனியுங்கள், வார்த்தையில் எழுதப்பட்ட, எந்த மீட்பின் ஆசீர்வாதங்களும். எனவே, அது பாவ பரிகாரத்தில் இருக்கிறதா என்று நீங்கள் தர்கிக்க வேண்டிய அவசியமில்லை. அது வார்த்தையில் இருக்கும் பட்சத்தில், தேவன் எல்லா சுயாதிபத்தியம் உள்ளவராய் இருப்பதால், அதை நிறைவேற்ற அவர் வல்லவராயிருக்கிறார். ஏனெனில் “வானமும் பூமியும் அழிந்து போனாலும், என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை”. 41. தேவனுடைய வார்த்தையின் மதிப்பே தேவனுடைய மதிப்பாகும். வார்த்தை தவறாய் இருக்கும் பட்சத்தில், அவரும் எனக்கு தவறாயிருப்பார். நீங்கள் சொல்வதின் மேல் நம்பிக்கை இல்லாத பட்சத்தில், நீங்களும் நல்லவரல்ல. ஆனால் உங்கள் வார்த்தை நல்லதாய் இருக்கும்போது, நீங்களும் நல்லவராயிருக்கிறீர்கள். அவ்விதமே அவருடையதும் நல்லதாய் இருக்கும் போது அவரும் நல்லவராயிருக்கிறார். நான், ஒரு கிறிஸ்தவ விசுவாசி என்ற பட்சத்தில், இந்த வேதாகமம் ஏவப்பட்டதாயும், பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்டதாயும், தவறாததாயும் இருக்கிறது என்று விசுவாசிக்கிறேன். எனவே தன்னுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுகிற விசுவாசிக்கு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார். அவருடைய வார்த்தை ஒரு வித்தாய் இருக்கிறது. நீங்கள் விசுவாசத்தினால் அதை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, அதை நம்பி, அதையே அறிக்கை செய்யும் போது, தேவன் அதை நிறைவேறும்படிக்குச் செய்வார். 42. இப்பொழுது, நான் அதை மறுபடியும் கூறட்டும், உலகம் முழுவதும் இருக்கிற நாளிதழ்கள், பருவ இதழ்கள் அநேக முறை என்னை ஒரு "தெய்வீக சுகமளிப்பவர்”, என்று கூறி பிரசுரித்திருக்கின்றன. ஞாபகம் கொள்ளுங்கள், அது ஒரு பிழையாக இருக்கிறது. பருவ இதழ்களிலும், நாளிதழ்களிலும் என்னைக் குறித்ததான செய்திக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். அவை எல்லாவற்றிலும் இரண்டு அல்லது மூன்று மட்டும் எனக்கு எதிர்ப்பாக எழுதியிருக்கிறது. அவைகளில் பெரும்பான்மை எனக்கு ஆதரவாக எழுதியிருந்தது. போஸ்ட் டிஸ்பாட்ச் (post dispatch) சிகாகோ டிரைபுயூன் (Chicogo Tribune) அவைகளில் எழுதப்பட்டிருக்கிறது, நீங்கள் அதை அந்த புத்தகங்களில் படிக்கலாம். எனவே அந்த பேப்பர்களை நீங்கள் திரும்ப கொண்டு வரும்படிக்கு நேரத்தை ஒதுக்கி, அந்த பேப்பர்களைப் பெற்று, அதில் செய்தியை அறிந்து கொள்ளுங்கள். அதில், மக்கள் கூட்டங்களுக்கு வந்து அவர்களாகவே தங்கள் சுகத்தை பெற்றுக் கொண்டார்கள் என்றும் அதை நிரூபர்களும் இன்னும் மற்றவர்களும், நீங்கள் நேரத்தை செலவிட்டு, காரியங்களைத் தெரிந்து கொள்ளும்படிக்குப் பார்க்கச் சென்ற போது, அவர்கள் தங்கள் கொள்கையை (vision) கைவிடுவதற்குப் பதிலாக, "ஆம், அவர் என் சபையைச் சார்ந்தவர் அல்ல”, என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். 43. அன்பான சகோதர, சகோதரியே, ஒரே ஒரு சபை தான் இருக்கிறது, அது தாமே ஒவ்வொரு சபையில் இருக்கும் விசுவாசிகளின் கூட்டமும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் வீற்றிருக்கும் உண்மையான விசுவாசிகளாயும் இருக்கிறார்கள். அந்த ஒன்று மட்டுமே சபையாய் இருக்கிறது. நாம் தேவனுடைய சபைக்குள்ளாக வருவதில்லை. பாப்டிஸ்டு ஐக்கியம், மெதோடிஸ்டு ஐக்கியம், கத்தோலிக்க ஐக்கியம், பிரஸ்பிடேரியன் ஐக்கியம் என்று இப்படிப்பட்ட ஐக்கியமாக மாறிவிடுகிறோம். சபையில் இருக்கும் சங்கங்களைப் (unions) போல, நாம் ஒரு வெளிப்பாட்டின் ஒப்பந்தத்தைக் கொண்டவர்களாக அங்கே மாறிவிடுகிறோம். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள், நாம் ஒரு கடிதம் மூலமோ, கை குலுக்கியோ, தண்ணீர் ஞானஸ்நானம் மூலமோ வருவதில்லை. ஆனால் வேதவசனம் கூறுகிறபடி, "நாம் எல்லோரும் ஒரு சரீரத்திற்குள் ஒரே ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்", ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில், நாம் எந்த ஐக்கியத்தோடு இணைக்கப்பட்டு இருந்தாலும்; நாம் தேவனுடைய ஆவியினால் ஒரு கிறிஸ்தவனாக பிறந்து, அவருடைய நாமத்தை விசுவாசிக்கும் விசுவாசிகளாகிறோம். ஓ-! எவ்வளவாய் நான் அவரை நேசிக்கிறேன். நீங்களும் அவரை நேசிக்கிறீர்கள் என்று நான் அவ்வளவாய் அறிந்திருக்கிறேன்-! உங்கள் ஒவ்வொருவரையும் அவர் சுகப்படுத்த வேண்டும் என்று எவ்வளவாய் இன்றிரவு நான் வாஞ்சிக்கிறேன். 44. எனவே இந்த (ஜெப) வரிசையை அழைப்பதற்கு முன் இதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தெய்வீக சுகமளித்தல் வழியாக உங்களை சுகப்படுத்துவதற்கு இந்த உலகத்தில் எந்த மனிதனுக்கும் வல்லமையே இல்லை. ஒரு மருத்துவர் முறிந்து போன கரத்தை அதின் நிலையில் பொருத்தி, அந்த கரத்தை சரி செய்யலாம். அவர் குடல் முளையை (APPENDIX), அறுவை சிகிச்சை செய்து நீக்கி இருக்கலாம். ஆனால் அந்த குடல் முளை கட்டியை நீக்கின பிறகு, அந்த இடத்தை யார் சுகப்படுத்தப் போகிறார்கள்-? அவர் ஒரு பல்லை பிடிங்கியிருக்கலாம், ஆனால் அதினால் ஏற்பட்ட குழியை சுகப்படுத்தப் போவது யார்-? அவர் ஒரு முறிந்து போன கரத்தின் எலும்பை சரி செய்திருக்கலாம், ஆனால் அந்த எலும்பை இணைக்கப் போவது யார்-? அதையெல்லாம் செய்வதற்கு இயற்கைக்கு மேம்பட்ட சக்தி அவசியமாயிருக்கிறது. மருத்துவமனைகளில், நோயாளி படுக்கைகளில், மற்றும் மருத்துவரின் அலுவலகத்தில் நடக்கும் எல்லா சுகமளித்தல்களும், அவை யாவும் தேவனின் சுகமளித்தலாயிருக்கிறது. நீங்கள் எப்படிப்பட்ட மருத்துவ உதவியை பயன்படுத்தினாலும் அது காரியமல்ல, அவைகள் வெறுமனே நிவாரனங்கள்; அவரே சுகம் அளிப்பவராயிருக்கிறார். நிவாரனங்கள் ஒரு உதவி தான்; ஆனால் தேவனே சுகம் அளிப்பவராயிருக்கிறார். இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா-? எனவே உங்களுக்கும் உதவி செய்திடும்படிக்கு, இயற்கையின் செயலுக்கு உதவிடும்படிக்கு மருத்துவர் உங்களுக்கு எல்லா உதவியையும் செய்யலாம், ஆனால் தேவனே உங்களுக்கு சுகத்தைக் கொடுக்கிறவராய் இருக்கிறார். 45. சங்கீதம் 103:3, "உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிற கர்த்தர் நானே”, என்று கூறுகிறது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? "அவரே உன் எல்லா வியாதிகளையும் சுகப்படுத்துகிறவர்”. இப்பொழுது நீங்கள் என்னிடத்தில் உனக்காக ஜெபிக்கும்படிக்கு நீங்கள் கேட்கலாம், ஆனால் நான் வந்து, உன் பாவங்களை என்னிடத்தில் அறிக்கை செய்து, உங்களை மன்னிக்க முடியாது. எனக்கு விரோதமாக நீங்கள் பாவம் செய்து இருப்பீர்களானால், நான் உங்களை மன்னிக்கக் கூடும். ஆனால் நீங்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்திருப்பீர்களானால், அவர் தான் உங்களை மன்னிக்க வேண்டும். மேலும் இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும், மற்றும் இன்னும் இவ்வுலகில் வர இருக்கிறவர்களையும் அவர் ஏற்கனவே மன்னித்திருக்கிறார், ஆனால் அதை அவர்கள் விசுவாசத்தினால் ஏற்றுக் கொண்டு பின்னர் அதை அறிக்கை செய்கிற வரைக்கும் அது அவர்களுக்கு ஒருபோதும் உதவி செய்யாது. அவ்விதமே வியாதிப்பட்ட எல்லா மக்களுக்கும் ஏற்கனவே சுகத்தை கொடுத்திருக்கிறார், ஆனால் அதை விசுவாசத்தினால் அறிக்கை செய்து, தொடர்ந்து விசுவாசித்து, அவர்களின் அறிக்கையின்படி செயல்படாத பட்சத்தில், அது அவர்களுக்கு ஒரு உதவியும் செய்யாது. ஏனெனில் "ஆவியில்லாத சரீரம் செத்ததாய் இருக்கிறது போல, கிரியை இல்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது”, என்று யாக்கோபு சொல்கிறார். எனவே நீங்கள் அதை விசுவாசித்து, அதின்படி செயல்பட வேண்டும். நீங்கள் அவரை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது, நீங்கள் அதை விசுவாசித்து, அவரைப் போல செயல்பட வேண்டும். 46. இப்பொழுது இதை கவனியுங்கள். மனுஷ சித்தத்தினாலோ அல்லது மனுஷனாலோ அல்லாமல் தேவ சித்தத்தினாலும், தேவனுடைய தெய்வீக முன்நியமத்தினாலும், நான் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறேன்; மேலும் என் பரிசுத்தத்தினாலும் அல்ல, என்னிடத்தில் எவ்வளவேனும் அது கிடையாது. என்னுடைய குடும்பத்தின் பரிசுத்தத்தினாலும் அல்ல; என் பல சந்ததிகளுக்கு முன், அயர்லாந்திலிருந்து இங்கு குடியேறினவர்கள். அவர்கள் கத்தோலிக்கர்கள், கடந்த சந்ததி வரைக்கும் என் மக்கள் எல்லோரும் கத்தோலிக்கராய் இருந்தனர். அவர்கள் எந்த ஒரு சபைக்கும் சென்றதில்லை, அதற்கு தூரமாயிருந்தார்கள். என் தகப்பனும் தாயும் அயர்லாந்தை சேர்ந்தவர்கள், பிரான்ஹாம் மற்றும் ஹார்வே குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு பக்தி என்ற ஒரு காரியமே இல்லாமல் இருந்தார்கள். இச்சந்ததியில் வந்த நான், என்னே-! என்னுடைய 24 வயது வரைக்கும் நான் சபைக்கே சென்றதில்லை. சபைக்குச் செல்லாதவனாயிருந்தேன். 47. கென்டக்கியில் ஒரு சிறிய மலையிலிருக்கும் மரவீட்டில் நான் பிறந்த போது, அந்த படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த ஒளி... அது தாமே விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டு, உலகமும் அது ஒரு இயற்கைக்கு மேம்பட்ட நபர் என்று ஒப்புக் கொள்கிறது. அந்த ஒளி நான் பிறந்த போது, அந்த அறையில் வந்தது. நான் சிறு பையனாக இருந்ததிலிருந்து அது என்னோடு கூட இருக்கிறது. அது தாமே என்னேடே பேசினதும், அதை என்னிடத்தில் அனுப்பி, “தேவனுடைய பிரசன்னத்திலிருந்து அனுப்பப்பட்டு, மக்களுக்கு முன்பாக செய்யும்படிக்கு இக்காரியங்களை உனக்குக் கொடுப்பேன்”, என்று கூறின அவர் தான் இவர். அவர்களை மெதொடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் சபைகளில் சேர்ந்துக் கொள்ளும்படிக்கு கூறாமல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படிக்கு கூறினது, அப்பொழுது அவர்கள் சுகமாகி அல்லது அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவார்கள். எனவே, நான் உங்களுக்கு உண்மையை கூறுகிறேன். எனவே நான் பிரசங்கித்தேன் என்றால் அது என்னால் தான் என்றும் எனக்கு கிடைத்தது என்றும் கூறுவேனென்றால், நான் ஒரு பொய்யனாக இருப்பேன், ஏனென்றால் அது என்னால் வந்ததல்ல. நான் அவரைக் குறித்தே பேசுகிறேன், அவரே சத்தியமாய் இருக்கிறார். அது உண்மை என்று அவர் சாட்சிக் கொடுப்பார். மக்களாகிய நீங்கள் ஜெபத்தில் தரித்திருந்து, இன்று இரவு ஆராதனை நடக்கும் வேளையில் உத்தமமாய் இருப்பீர்களானால், அப்பொழுது உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை தேவன் எனக்கு காண்பிக்கும் போது, அதை நான் உங்களுக்கு தெரிவிப்பேன். அதே சமயத்தில் அவர் காண்பிக்காத பட்சத்தில், நான் உங்களுக்கு தெரிவிக்க முடியாது. 48. அவருடைய ஊழியக்காரன் என்ற முறையில், இன்றிரவு இங்கிருக்கும் ஒவ்வொரு வியாதிப்பட்ட மக்களுக்கு நான் சவால்விடுகிறது... இங்கே அநேக ஜெப அட்டைகள் வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஒரு சில (ஜெப) அட்டைகளை மட்டுமே நம்மால் அழைக்க முடியும், ஏனெனில் அபிஷேகத்தின் கீழ் என்னால் அவ்வளவு தான் தாக்குப்பிடிக்க முடியும். மேலும் மேலாளர்களும் என் மகனும் என்னை அழைத்து சென்று விடுவார்கள், ஏனெனில் நாளை இரவு எனக்கு இன்னொரு கூட்டம் இருக்கிறது. வேதாகமத்தில் இருக்கும் வேத வசனங்களை அறிந்தவர்களுக்கு அது என்னவென்று தெரியும். அந்த தூதனிடத்திலிருந்த ஒரு நபரின் மேல் வல்லமை சென்ற போது அதை கவனியுங்கள். தானியேல் ஒரு தரிசனத்தை கண்ட போது, அவனை கவனியுங்கள், அவன், "அநேக நாட்களுக்கு என் தலையில் அதினிமித்தம் கஷ்டப்பட வேண்டியதாயிருந்தது”, என்றான். அது சரி தானே-? ஒவ்வொரு நாள் இரவும்-! ஏன்-? ஏனெனில் இயேசு, "நான் செய்கிற இந்த கிரியைகளை, நீங்களும் செய்வீர்கள், அதைக் காட்டிலும் அதிகமாய் செய்வீர்கள்”-? என்றார். இது ஒரு சில இடத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நத்தான்வேல் என்ற பெயரை கொண்ட ஒரு மனிதன் அவரிடத்தில் வந்தபோது, அவர், இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன், இன்னொரு வார்த்தையில் கூறுவோமானால், அது கிறிஸ்தவன் என்று அர்த்தமாகும். அதற்கு அவன், “எப்பொழுது என்னை நீர் அறிவீர்”, என்றான். அவர், "பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னமே, நான் உன்னைப் பார்த்தேன்”, என்றார். அது உண்மை தானே-? மேலும் அவர் ஒரு பெண்ணிடம் அவளுடைய ஆவியைப் பிடிக்கும்படிக்கு, அவளுடன் சம்பாஷனை செய்துக் கொண்டு, "போய் உன் புருஷனை கூட்டி வா", என்றார். அதற்கு அவள், “எனக்கு புருஷன் இல்லை”, என்றாள். "நீ சரியாக சொன்னாய், உனக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள்", என்றார். இப்படிப் பட்டவைகள் வேத வசனத்தில் குறைவான முறைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், “பெரிதானவைகளை”, அதற்கு அர்த்தம், "இதைக் காட்டிலும் அதிகமான காரியங்களை நீங்கள் செய்வீர்கள், ஏனெனில் நான் என் பிதாவினிடத்திற்கு போகிறேன்". இப்பொழுது இது அந்த வார்த்தையை நிறைவேற்றுகிறது. 49. ஜெபத்திற்காக நாம் தலை வணங்கும் போது, கர்த்தராகிய இயேசு தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. எங்கள் பரலோகப் பிதாவே, பசியுள்ள இருதயங்கள் இந்த உஷ்ணமான கட்டிடங்களில் அமர்ந்து, எளிமையான விதத்தில் வல்லமையாக பிரசங்கிக்கப்படும் சுவிசேஷத்தை கேட்க ஏறக்குறைய 40,000 மக்கள் இந்த ஜமைக்காவின் வெப்பமான சூரிய உஷ்ணத்தையும் பொருட்படுத்தாமல் வந்துள்ளதற்காக இன்றிரவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். மேலும் இந்த கடல்களில், தெளிவாக கூறுவோமானால் இந்த கடல் பகுதிகளில் இருக்கும் தீவுகளிலிருந்து, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கேட்கும்படிக்கு வந்திருந்தார்கள். மேலும் பரிசுத்த ஆவியானவர் அந்தவிதமான வடிவில் கீழ் இறங்கி வந்து, சுகம் தேவைப் படுவோரை சுகப்படுத்தினதைக் காணும்படி செய்தீர். பிதாவே, அதற்காக உமக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 50. இந்த போற்றுதலுக்குரிய பென்சில்வேனியா மாநிலத்திற்கும், இதின் ஆளுநருக்கும், எல்லா அலுவலர்களுக்கும் மற்றும் இந்த ஈரி பட்டணத்திற்கும் மேலும் இந்த மக்களுக்கும், சபைகளுக்கும், உயர்ந்த கூர்நுனி கோபுரங்களைக் கொண்டு இங்கே வீற்றிருக்கும் ஒவ்வொன்றிற்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், கர்த்தாவே, மேலும் காலை பொழுதில் (சபைகளில்) மணி ஒலிக்கும் போது, தங்கள் ஆத்துமாக்களை அமைதிப்படுத்தி, ஆறுதலளிக்கக்கூடிய, "எப்படியெனில் இது வெறுமனே நிழல் மட்டுமே என்றும், என்றோ ஒரு நாளில் இந்த மரணம் என்ற நிழற்படம் அசல் படமாக மாறும். அப்பொழுது நாம் ஒருவரையொருவர் முகமுகமாக தரிசித்து நாம் எவ்விதமாக இருப்போம் என்பதை அறிந்து கொள்வோம்” என்ற செய்தியை கேட்கும்படிக்கு மக்கள் சபைக்கு விரைந்து சென்றார்கள். அநேகர் வியாதிப்பட்டு, சிலாக்கியத்தை இழந்து எழுபது வயதை தொட முடியாமல் தங்கள் ஜீவிய வாழ்க்கையின் நாட்கள் குறைக்கப்பட்டு முன்னறெ கடந்து போய் விடுகிறார்கள். சாத்தான் இந்த பொல்லாத காரியத்தை அவர்களுக்கு செய்திருக்கிறான். 51. பிதாவே, இன்றிரவு உம்முடைய தாழ்மையான ஊழியக்காரன் கூறுவது, இந்த மக்கள் எனக்கு செவி கொடுக்கிறார்கள் என்று ஜெபிக்கவில்லை, ஆனால் இந்த ஜெபத்தின் மூலம் உம்முடன் பேசுகிறேன், ஓ, தேவனே, என்னை வழி நடத்தினதும், உம்மிடத்திலிருந்து அனுப்பப்பட்டும், என் ஜீவிய நாட்களில் என்னை போஷித்த தூதன், இன்றிரவு என் அருகில் நின்று நான் பேசின வார்த்தைகளை உறுதிப்படுத்துவாராக, அப்பொழுது மக்கள் உம்மேல் விசுவாசம் வைத்து இரட்சிக்கப்பட்டு சுகமடைவார்கள். இந்த கூட்டம் முடிந்த பின், தற்பொழுது என்ன நிகழ்ந்தது என்று மக்கள் உணர்வை அடைந்து, பட்டணத்திலிருக்கும் ஒவ்வொரு சபையிலும் எழுப்புதல் உண்டாகட்டும். ஓ, இந்த பட்டணம் முழுவதும் கர்த்தராகிய இயேசுவுக்காக கிளர்ந்தெழட்டும். மேலும் பட்டணத்திலிருக்கும் ஒவ்வொரு போதகரும், "மக்கள் சபைக்கு வருவதையும், தங்கள் பாவங்களை அறிக்கை செய்வதையும், கிறிஸ்துவுக்காக ஜீவிக்க விரும்புவதையும், மற்றும் சபையில் சேர்ந்துக் கொண்டு சபை நிரப்பப்படுவதையும் காணும் பொழுது” அவர்கள் உற்சாகமடைவார்களாக. வியாதிப்பட்டிருந்த ஒரு வியாதியஸ்தன், கர்த்தாவே, அவன் சுகமடைந்து ஆயிரக்கணக்கானோருக்கு சாட்சி பகர்ந்து, விசுவாசிப்பதை அவன் காணும் போது, இதை அளியும், கர்த்தாவே, ஏதோ காரியம் இன்று இரவு நடக்கட்டும். 52. இப்பொழுது, ஓ, கர்த்தாவே உமக்கு முன்பாக இந்த கூட்டத்தார் மற்றும் எந்த ஒரு மனிதனும் தெய்வீக சுகமளிப்பவராக அல்லது இரட்சகராக இல்லை என்று அறிக்கை செய்திருக்கிறேன். உம்முடைய அன்பான குமாரன் மட்டுமே அதை எங்களுக்காக செய்திருக்கிறார். எனவே அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் தாழ்மையோடு தலை குணிந்து அவருக்கே எல்லா துதியையும், மகிமையையும் கொடுக்கிறோம். மேலும் அவர் கல்வாரியில் செய்து முடித்த கிரியையின் மேல் எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கும்படிக்கு இன்றிரவு உம்மை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், கர்த்தாவே. "நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு அவருடைய தழும்புகளால் குணமானோம்”, என்னும் இரட்டத்தணையான சுகத்தை நாங்கள் பெற்றுக் கொள்ளும்படிக்கு எங்களுடைய பெரும்பாடுகளை அவர் ஏற்றுக் கொண்டு கிரயமானது அங்கே செலுத்தப்பட்டது. எனவே அந்த இரட்டத்தணையான சுகம் இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் இன்றிரவு கிடைப்பதாக. பார்வையற்ற ஃபெனி கிராஸ்பி (FANNY CROSBY) அநேக நாட்களுக்கு முன் இந்த பாடலை எழுதினாள்: ஓ, இரக்கமுள்ள இரட்சகரே, என்னை கடந்து செல்லாமல், என் தாழ்மையான கூக்குரலை கேட்டருளும். மற்றவர்களை நீர் அழைக்கும்போது, என்னையும் நீர் கடந்து போகாதிரும், என் எல்லா ஆறுதலுக்கும் ஊற்றாக இருப்பவரே, நீர் எனக்கு என் ஜீவனைக் காட்டிலும் பெரிதானவர், இப்பூமியில் உம்மையல்லாமல் வேறு எவரும் எனக்கில்லை. அல்லது பரலோகத்தில் உம்மையல்லாமல் வேறு யார் எனக்கு உண்டு. 53. மேலும் இன்றிரவு இங்கே புற்று நோய், இருதய கோளாறினால் பாதிக்கப்பட்டு இன்னும் சிறிது நாட்களே ஜீவிப்பதற்கும், இருந்து, பின்னர் நியாயத்தீர்ப்பிலே பதில் சொல்ல வேண்டிய நிலையில் இங்கே வீற்றிருக்கும் மக்களைப் பார்க்கும் போது, ஓ. தேவனே, ஓ. இரக்கமுள்ள இரட்சகரே, ஆனால் அவர்கள் விசுவாசத்தை தூண்டிவிடும் வகையில் ஒரு காரியம் நிகழட்டும். அப்பொழுது அவர்கள் மருத்துவர்களின் சிகிச்சை, இன்னும் எல்லா பனிமூட்டம், தடையையும் தாண்டி அவர்கள் மேல் நோக்கிப் பார்த்து, "இவர் என் நேச குமாரன், இவருக்கு செவி கொடுங்கள் என்று கூறின யெகோவா தேவனுக்கு முன் தொங்கிக் கொண்டிருக்கும் இரத்தம் தோய்ந்த பலியை இன்றிரவு நோக்கிப் பார்ப்பார்களாக. மேலும் "நீங்கள் ஜெபிக்கும் போது, நீங்கள் வாஞ்சிக்கிற எந்த காரியத்தையும், அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசிக்கும் போது, அவைகள் உங்களுக்கு கொடுக்கப்படும்", என்று பாலஸ்தீனாவில் கூறின அவருடைய சத்தத்தை இன்றிரவும் உரக்க சத்தமிடுகிறதை எங்களால் கேட்க முடிகிறது. எனவே இக்காரியங்கள் அவ்விதமே நடைபெறும்படிக்கு, இதை அளியும் கர்த்தாவே. இப்பொழுதும் நான், உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், உம்மை தாழ்மையுடன் கேட்பது என்னவெனில் இப்பொழுது என்னை திரைக்கு பின்னால் மறைத்துக் கொள்ளும்படிக்கு கேட்டுக் கொள்கிறேன். கர்த்தாவே, ஏதோ நான் தகுதியுடையவன் என்று என்னை ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஏனெனில் நான் தகுதியற்றவன். ஆனால் உம்முடைய ஜனம் இங்கே இருக்கிறார்கள் மற்றும் உம்முடைய தகுதியான குமாரன் இந்த தகுதியான காரியத்திற்காக மரித்ததே காரணமாயிருக்கிறது. இன்றிரவு பரிசுத்தமான கரங்களை நீர் தேடுவீர்களானால், எங்கே அதை கண்டுபிடிக்க முடியும்-? நாங்கள் எல்லோரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்தவர்களானோம். ஆனால், ஓ,பிதாவே,உம்முடைய வார்த்தை தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அது நிச்சயம் நிறைவேறும். இன்று பகல் மற்றும் இன்று இரவு, கடந்த இரவுகளில் கர்த்தருடைய தூதனைக் குறித்து நான் பேசின வார்த்தைகளை, இன்றிரவு அது தாமே உறுதிப்படுத்தப்படட்டும். இதை அளியும், உம்முடைய ஜனங்களில் பெரும்பாலானோர் விசுவாசித்து, சுகமடைவார்களாக. 54. இப்பொழுது, கர்த்தாவே, இங்கே இருக்கிற மக்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் உமக்கு அவர்களை குறித்ததான எல்லாமும் தெரியும். இவர்கள் விசுவாசிக்கும் படிக்கு, இவர்களுடைய இருதயமானது இன்றிரவு கல்வாரியை நோக்கி திசை திருப்பட்டும். எனவே அவர்கள் விசுவாசிக்கும்போது, கர்த்தாவே, இன்றிரவு உம்முடைய தீர்க்கதரிசிக்கு காண்பிப்பீராக, எப்படியெனில் பரிசுத்த தாழ்மையுள்ள ஆவியின் வல்லமையினால் நான் இந்த மக்களின் இருதயத்தை பார்க்க, அவர்களும் சுகத்தை பெற்றுக் கொள்வார்களாக. இதை நான் உம்முடைய தாழ்மையுள்ள ஊழியக்காரனாக கேட்கிறேன். சுகத்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு தன் கரத்தை (ஆணியடிக்கும்படிக்கு) நீட்டின உம்முடைய அன்பான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். தேவனை விசுவாசிக்கும் ஒவ்வொரு பிள்ளையும் ஜெபத்தில் தரித்திருப்பார்களாக. இங்கு இருக்கும் எல்லா விசுவாசிகளும் எழுந்து நிற்பார்களாக. நீங்கள் எழுந்து நிற்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறவில்லை, ஆனால் உங்கள் இருதயத்தில் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறுகிறேன். நன்றி, நன்றி. என்னோடு கூட ஜெபத்தில் ஐக்கியப்பட்டு நீங்கள் எல்லோரும் நில்லுங்கள். உங்களுக்குத் தெரியுமா-? எங்கே ஐக்கியம் இல்லையோ, அவ்விடத்தில் தேவ ஆவியானவர் வரவேற்கப்பட மாட்டார். 55. உங்களுக்குத் தெரியுமா, இயேசு யவீருவின் குமாரத்தியை எழுப்ப சென்ற போது, ஏன் அவள் தான்... என்று மக்கள் கூறினார்கள். அவர், "அவள் மரிக்கவில்லை, அவள் நித்திரையாய் இருக்கிறாள்”, என்றார். அதைக் கேட்டு அவர்கள் எல்லோரும் நகைத்தார்கள். அது சரி தானே-? ஆனால் அவர்கள் எல்லோரையும் வீட்டுக்கு வெளியே போகும்படி செய்தார். அது சரி தானே-? அவர் விசுவாசிகளை மட்டும் அங்கே இருக்கும்படிக்கு செய்தார். பேதுருவும்; அந்த அன்பான, ஏழைகளுக்கு உதவி செய்திரும் தோர்காளை உயிரோடே எழுப்பும்படிக்கு சென்ற போது, அங்கே மக்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள், ஆனால் அவர்களெல்லாரையும் வீட்டை விட்டு அனுப்பிவிட்டார். இயேசுவும் ஒரு மனிதனை கையோடு கூட பட்டணத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார், ஏனெனில் அவனிடத்தில் அவிசுவாச ஆசாரியர்களும் இன்னும் அப்படிப் பட்டவர்களும் இருந்தனர். எனவே அவர் அவனை பட்டணத்துக்கு வெளியே கொண்டு சென்று, செவிட்டு தன்மையிலிருந்து அவனை குணமாக்கினார். அது சரி தானே-? எனவே கிறிஸ்தவ விசுவாசிகளாகிய நீங்கள் இன்றிரவு என் ஸ்தானத்தை நீங்கள் இனங்கண்டு கொள்வீர்கள் என்று நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன். ஆதலால் இந்த கட்டிடம் எவ்விடத்திலும் இருக்கிறவர்களுக்கு தெரியக்கடவது. அவிசுவாச அல்லது சந்தேக எண்ணமுடைய மக்களுக்கு நிகழும் எக்காரியத்துக்கும் நான் பொறுப்பு அல்ல. மேலும் உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டியது என்னவெனில் வியாதிகள் உண்மையிலே பிசாசுகளாய் இருக்கிறது. 56. செவிட்டுத் தன்மை அல்லது ஊமைத் தன்மையை எடுத்துக் காட்டுக்காக கொள்ளலாம். காதில் உள்ள நரம்புகள் மரித்துப் போய்விட்டது என்று மருத்துவர் காரணம் கூறலாம். சரி, அதை மரித்துபோகும்படி செய்தது எது-? ஆனால் அது அவன், அவன் உடம்பில் இருக்கும் எல்லாவற்றையும் மரிக்க செய்யவில்லை. காரணம் அதை துண்டித்துப் போகும்படிக்கு இயற்கைக்கு மேம்பட்ட ஒரு வல்லமை அங்கே கிரியை செய்து, அதை இயங்கவிடாமல் செய்கிறது. ஒளி ஊடுருவும் கண்ணாடி போன்ற வளையம் என் கரத்தை சுற்றி இருக்கும் போது, அதை உங்கள் கண்களால் காணமுடியாது, ஆனால் உணர முடியும், ஏனெனில் அந்த ஒரு புலன் மட்டுமே அதை உறுதிப்படுத்தும். இயற்கையான புலன்களால் அதை காண முடியாத பட்சத்தில், அது இயற்கைக்கு மேம்பட்ட காரியமாயிருக்கிறது. இப்பொழுது அது உண்மை தானே-? 57. செவிட்டு தன்மை பாதிப்பை ஏற்படுத்திய ஆவி அந்த மனிதனை விட்டு சென்றவுடன், கவனியுங்கள் இயேசு என்ன கூறினார் என்று, "அவனால் காது மூலம் கேட்க முடிந்தது", அது சரி தானே-? செவிட்டு பாதிப்பை ஏற்படுத்துகிற ஆவி, ஊமை பாதிப்பை ஏற்படுத்துகிற ஆவி அந்த குழந்தையை விட்டு சென்றவுடன், அதினால் பேச முடித்தது. "ஆலி". எனவே அவைகள் ஒரு நபரை விட்டு வெளியே வந்தவுடன் அவைகள் ஒரு சரீரத்தை விட்டு வெளியேறி விடும் பட்சத்தில், பிசாசுகளாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. சுதரேனயாவில், ஒரு மனிதனை பிடித்திருந்த பிசாசுகள் இயேசுவை சந்தித்த போது நிகழ்ந்ததை கவனியுங்கள். அவைகள், "அந்த சரீரத்தை விட்டு அந்த பன்றிகளுக்குள் போகும்படிக்கு உத்தரவிட வேண்டும்". என்று கேட்டுக் கொண்டன. இயேசுவும், "போ", என்றார். அப்பொழுது பிசாசுகள் பிடித்த மனிதனிலிருந்து பன்றிகளுக்குள் சென்ற போது, அந்த மனிதன் எப்படி அலைகழிக்கப்படுகிறானோ அவ்விதமே அவைகளும் அலைகழிக்கப்பட்டு, உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டன. 58. வேதாகமத்தில் அப்போஸ்தலர் 19-ல் ஒரு ஊழியக்கார ஆசாரியனின், இரண்டு பையன்கள் அல்லது சில தேசாந்திரிகள், காக்காய் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனிடத்திலிருந்து, பிசாசை துரத்த சென்றதை கவனியுங்கள், அவர்கள் பவுல் பிசாசுகளை துரத்துவதை பார்த்தார்கள், அவர்கள் இயேசுவை பார்த்தார்கள், எனவே இந்த மனிதனிடத்தில் இருந்த இந்த பிசாசை அவர்கள் நோக்கி, "பவுல் பிரசங்கிக்கிற இயேசுவை கொண்டு உங்களை வெளியே வரும்படிக்கு ஆணையிடுகிறோம்", என்றார்கள். பிசாசு அவர்களை நோக்கி, "இயேசுவையும் அறிவோம், பவுலையும் அறிவோம், ஆனால் நீங்கள் யார் என்று சொல்லி, பிசாசு அம்மனுஷர்களை மேற்கொண்டு அவர்களுடைய ஆடைகளை அவர்களிலிருந்து களைந்து போட்டது, அவர்களும் நிர்வாணிகளாக தெருவில் ஓடிச் சென்றார்கள். அது சரி தானே-? இப்பொழுது, அந்த பிசாசுகள் இன்றிரவு அதே பிசாசுகளாக இருக்கின்றன, ஆனால் அவைகள் மக்கள் காக்காய் வலிப்பு, செவிடு, ஊமை, புற்றுநோய், கண்புரை என்று அழைக்கின்றனர். அவைகள் உண்மையிலேயே பிசாசுகளாய் இருக்கின்றன. எனவே அவைகள் வெளியே வந்தவுடன், மற்றவர்களிடத்தில் அவைகள் செல்கின்றன. அவைகளினிமித்தம் இன்றிரவு இத்தேசமெங்கும் இருக்கும் அநேகம், அநேகம், அநேகம் பேர் துன்பப்படுகிறார்கள். எனவே, அது யாவருக்கும் அறியப்படட்டும், விசுவாசிகளைத் தவிர, குறை காண்பவர்களுக்கு நான் பொறுப்பல்ல. நான் கூறினதை சத்தியம் என்று விசுவாசிக்கிற எந்த ஒருவரிடத்திலும் அது அருகிலும் வராது. அது சரியே. 59. எனவே இப்பொழுது... நாம் அடுத்த காரியத்தை பார்க்கலாம், என் பையன் எங்கே-? இப்பொழுது எத்தனை அட்டைகளை கொடுத்திருக்கிறாய்-? G- 50 முதல் நூறு வரைக்குமா-? கடந்த இரவு நாம் அதில் முதல் எண்ணிலிருந்து ஆரம்பித்தோம். நேற்றைய இரவுக்கு முந்தின இரவு, நாம் மத்தியிலிருந்து துவங்கினோம். இப்பொழுது நாம் கடைசி, கடைசி பதினைந்து எண்களை அழைக்கலாம்; 85...90...95... நூறு முடிய. எனவே 6 வரிசையிலிருந்து துவங்குவோம். இப்பொழுது... நீங்கள் யாராயிருந்தாலும், உங்களைச் சுற்றி கவனித்து, அட்டைகளைக் கண்காணியுங்கள். எனவே சுற்றியுள்ள நபர்களை கவனியுங்கள். இங்கே ஒரு மனிதன்... உங்களிடத்தில் உள்ளதா, ஐயா-? 70, G 70.நீங்கள் சுற்றும் முற்றும் பாருங்கள், யாராவது செவிடோ, அல்லது வேறு ஏதாவது அல்லது காது கேளாதவராக இருக்கலாம். கவனித்து அவர்களுடைய அட்டைகளை பரிசோதியுங்கள். G - 85, 90,85, அல்லது 85, 90, 95, 100. அந்த எண்களிலிருந்து துவங்கி, அவர்களை கூட்டி சேருங்கள், அவர்களில் கடைசி 15 நபர்கள். எனவே, இப்பொழுது உங்களால் கூடுமான வரை, உங்களுடைய ஜெப அட்டை எண்களின்படி வரிசையில் நில்லுங்கள். 85 மற்றும் 90-90.. 85, 86, 87, 88, 89, 90, 100 முடிய. அது நல்லது. 60. இங்கே எத்தனை பேர்... நன்றி ஐயா-! நன்றி ஐயா-! நன்றி ஐயா. இங்கே எத்தனை பேரிடத்தில் ஜெப அட்டை இல்லை, உங்கள் கரங்களை நான் இப்பொழுது பார்க்கட்டும். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா-? உங்களை சுகப்படுத்தும் படிக்கு கர்த்தராகிய இயேசு இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சரி நல்லது. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், என் கிறிஸ்தவ நண்பனே, உங்களுக்கு சுகம் கிடைக்கும்படிக்கு கர்த்தராகிய இயேசுவின் பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள தேவன் இடத்தில் கேட்கும்படிக்கு இங்கே இருக்கும் ஒவ்வொரு விசுவாசிக்கும் நான் சவால் விடுகிறேன். இப்பொழுது இங்கே இருக்கிற மக்கள் வெறுமனே ஒரு அட்டையைத் தான் வைத்து இருக்கிறார்கள், அந்த அட்டையில் ஒரு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் செய்வதற்கு காரணம் இருக்கிறது, ஏனெனில் இங்கே இருக்கிறவர்களிடத்தில், யாருக்கெல்லாம் ஜெபம் தேவைப்படுகிறது என்று சொல்வேனென்றால், அப்பொழுது எவ்வளவு பெரிய கூட்டம் இங்கே வரும் என்று நீங்கள் கவனிக்கலாம். "இன்ன, இன்னவர்கள் எல்லாம்", என்று அவ்விதம் நான் சொல்வேனென்றால், அப்பொழுது துவங்குவதற்கு என்று ஒரு நபரும் முன்வர வாய்ப்பிருக்காது, எனவே தான் நாங்கள் ஜெப அட்டைகளை கொடுத்து, ஏதாவது வரிசையை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து துவங்கி, அவர்கள் வரிசையில் வரும்படிக்கு அழைக்கிறோம். எதிலிருந்து துவங்கப் போகிறோம் என்று ஒருவருக்கும் தெரியாது, ஏனெனில் நாங்கள் இங்கே வந்த பிறகு தான் அதை தீர்மானிக்கிறோம். 61. இப்பொழுது இங்கே மக்கள் கட்டில்களிலும், தூக்கு கட்டில்களிலும் (STRETCHERS) இன்னும் இது போன்றும் கிடத்தப்பட்டிருக்கிறார்கள். யாராவது, உங்களுடைய அட்டையை நீங்கள் பார்ப்பீர்களா, சீமாட்டியே, உங்களுடைய கைகள் முறுக்கினது போல் காணப்படுகிறது. உங்களால் உங்கள் (ஜெப) அட்டையை பிடிக்க முடிகிறதா-? அவள் எந்த எண்ணை வைத்திருக்கிறாள் என்று பாருங்கள். ஓ, என்னே-! நல்லது, சீமாட்டியே, இந்த வழியாக நீங்கள் பார்த்து, உங்கள் பரலோகப் பிதாவை நோக்கி, இன்றிரவு உங்களை சுகப்படுத்தும்படிக்கு கேளுங்கள். உங்களைக் குறித்து என்ன-? உங்கள் அட்டையை குறித்து என்ன-? உங்கள் (ஜெப) அட்டை வரிசையில் வரவில்லையா-? இப்பொழுது, தூக்கு கட்டில்களில் (STRETCHERS) இருக்கும் சீமாட்டிகளே, இங்கே கவனித்து, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் புதியவர்களாய் இருக்கிறீர்கள். எனக்கு உங்களைப் பற்றி தெரியாது. ஆனால் கவனியுங்கள், உங்களை சுகப்படுத்தும் படிக்கு இயேசு இங்கே இருப்பார் என்று உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அவர் அதை செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? இப்பொழுது வியாதியஸ்தர் எத்தனை பேர் அங்கே வெளியே இருக்கிறீர்கள். ஜெப அட்டைகள் இல்லாதிருந்து, சுகமடைய வேண்டும் என்று இருக்கிறவர்களின் கரங்களை நான் மறுபடியும் பார்க்கட்டும். அது சரி, அது அதிகமான பேர்கள், சுற்றிலும் இருக்கிற எவ்விடத்திலும் இருக்கிறார்கள். 62. இப்பொழுது ஜெபத்தில் தரித்திருப்போம், பரலோகப் பிதா எனக்கு வெளிப்படுத்துவார், அவர் அதை செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நல்லது, எனவே நீங்கள் ஜெபத்தில் தரித்திருந்து, உங்களை சுகப்படுத்தும்படிக்கு அவரிடத்தில் கேளுங்கள். இப்பொழுது விசுவாசத்தோடு இருங்கள். நித்திய தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது வரிசையில் இருக்கிற யாவரும், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? இங்கே இருக்கிற ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறீர்களா-? நல்லது, அப்படியானால் தேவன் மேல் விசுவாசமாயிருங்கள். உங்களில் ஒருவரையும் எனக்குத் தெரியாது. உங்களை எனக்கு தெரியும் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. இல்லை, உங்களில் எவரையும் எனக்குத் தெரியாது. நல்லது, இப்பொழுது உங்கள் முதல் நோயாளியை நீங்கள் கொண்டு வரும் போது, நீங்கள் விசுவாசத்தில் தரித்திருங்கள். 63. சீமாட்டியே, எப்படி இருக்கிறீர்கள்-? நாம் ஒருவருக்கொருவர் புதியவர்கள் என்று நினைக்கிறேன். என் வாழ்நாளில் ஒரு போதும் நான் உங்களை பார்த்ததாக நான் நம்பவில்லை. நம் வாழ்நாளில் நாம் ஒருவருக்கொருவர் புதியவர்களாய் இருக்கிறோம், மற்றும் நீங்கள் என்னிடத்தில் உதவிக்காக வந்திருக்கிறீர்கள். உங்களைப் பார்த்த மாத்திரத்தில் நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்றும், விசுவாசி என்றும் நான் எண்ணுகிறேன், காரணம் பரிசுத்த ஆவியானவர் பாவத்தை பொறுத்துக் கொள்ளமாட்டார். நீங்கள் இதற்கு முன் இங்கே இருந்திருப்பீர்களானால், அதை கூட்டங்களில் கவனித்திருப்பீர்கள். எனவே பாவம் பிரசங்க மேடையிலோ அல்லது கூட்டத்தார் மத்தியிலோ இருக்குமானால், அது உடனே உரக்க சத்தமிட்டு வெளிப்படுத்திவிடும். காரணம், அவர் பாவத்தை பொறுத்துக் கொள்ளமாட்டார்; ஆம், தேவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர் பரிசுத்தமானவர் எனவே அவரால் பாவத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. நான் அவருடைய ஊழியக் காரன் என்று விசுவாசிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், எனவே அவ்விதமே நீங்கள் செய்யுங்கள். 64. இப்பொழுது சற்று முன் ஒரு ஜெப அட்டையை பெற்றுக் கொண்டாய். அதில் ஒரு எண்ணும் மற்றும் ஒரு எழுத்தும் இருக்கிறது. அது அழைக்கப்பட்ட போது, நீ ஒரு அந்நியராக எனக்கு முன் வந்திருக்கிறாய். இப்பொழுது நான் உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதற்கான காரணம், இங்கே நீ என் முதல் நோயாளியாக இருக்கிறாய். எனவே... நான் உன்னுடன் சற்று உரையாட வேண்டியதாய் இருக்கிறது. கிணற்றண்டை இருந்த ஸ்திரீயினிடத்தில் இயேசு "எனக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வா”, என்று பேசிக் கொண்டிருந்ததை போலிருக்கிறது. அதற்கு அவள், "யூதர்கள், சமாரியர்களிடத்தில் எந்த காரியத்தையும் கேட்பது என்பது பழக்கமில்லையே:, என்றாள். அதற்கு அவர், “ஆனால் உன்னுடன் பேசுவது யார் என்று அறிந்திருப்பாயானால், நீயே என்னிடத்தில் தண்ணீரை குடிக்கக் கேட்டிருப்பாய்”, என்றார். அவ்விதமாய் அவர் அவளுடன் தொடர்ந்து உரையாடி, அவளிடத்தில் நேரிடையாக இடைபட்டு, அவளிடத்தில் என்ன தவறு இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். அது சரி தானே-? கவனியுங்கள்... அவர் செய்த காரியங்களை, அதை திரும்பவும் அளிப்பார். எனவே முன்மாரி மற்றும் பின்மாரியை வாக்குரைத்திருக்கிறார். அது தாமே கடைசி நாட்களில் நிறைவேறும். 65. இப்பொழுது ஏதோ காரியம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி நீங்கள் உணரவில்லையா-? நான் உங்களுடன் பேசத் துவங்கின மாத்திரத்தில், அதை இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டீர்களா. எனவே ஏதோ காரியம் அப்பொழுது நிகழ்ந்தது, அப்படியில்லையா-? ஏதோ உங்களை இப்பொழுது புண்படுத்த வேண்டும் என்பதற்கில்லை. ஆனால் அது உங்களை சுகப்படுத்துவதற்கே. நேற்று இரவு, அதைப் பற்றின புகைப்படத்தை பின்னால் வைக்கப்பட்டிருந்ததை நீங்கள் பார்த்தீர்களா-? நேற்றைய தினம் நீங்கள் இங்கே இல்லை. நீங்கள் இந்த மேஜையை கடந்து சென்று, அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்பொழுது அது என்ன என்றும், அது காணப்படுகிற விதம், அமெரிக்காவில் எவ்விதமாய் அது சிறந்த முறையில் ஆராயப் பட்டிருக்கிறதென்றும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள், மற்றும் அது இன்று மார்க்க சம்பந்தப்பட்ட கலையரங்கத்தில், "இயற்கைக்கு மேம்பட்ட நபரின் புகைப்படம்", என்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது, அதை கூட்டத்தினர் அதை அறிவார்கள். எனவே நாம் பேசத் துவங்கினது முதல், ஒரு அருமையான, நான் உங்களுக்கு கூறுவதென்னவெனில் ஓர் இனிமையான, மென்மையான உணர்வு உங்கள் மேல் வருகிறது. அது சரிதானே-? அது உண்மையென்றால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது அது என்னவெனில் அது கர்த்தருடைய தூதன், உங்களை தொடர்பு கொள்கிறதாய் இருக்கிறது. உங்களில் ஏதோ காரியம் தவறாய் இருக்கிறது. நான் அவருடைய ஊழியக்காரன். அதோ அங்கே இருக்கிற மின்விளக்குக்கு, அதினோடு தொடர்பில் இருக்கும் மின் கம்பி அதற்கு பனிவிடையாளாக இருக்கிறது போல் நான் இருக்கிறேன். அது மின் கம்பியினால் நிகழுகிற காரியமல்ல. ஆனால் மின் கம்பியினூடாக போகிற மின்சாரமே அதற்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது, மின் கம்பி வெளிச்சத்தை கொடுக்காது. அவ்விதமே உன்னிடத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதை என்னால் கூறமுடியாது அல்லது உனக்கு எந்த வெளிச்சத்தையும் என்னால் கொடுக்க முடியாது. அது... நீங்கள் இப்பொழுது உணர்கிற இந்த ஆவியானவர், அவரே உங்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வருவார். 66. ஆம், அம்மையீர், நீங்கள் அவதிப்படுகிறீர்கள். அப்படியில்லையா, சகோதரியே-? நீங்கள் மிகுதியாக பதட்டத்தினால் பாதிக்கப்பட்ட நபராக இருக்கிறீர்கள். உங்களுக்கு அதிகமான தொல்லை இருக்கிறது. மேலும்... நிமித்தம் தொந்தரவுக்கு ஆக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அதிகமான இரவுகளில்... இல்லாமல், இரவு நேரங்களில் எழுப்பப்பட்டு அல்லது அவ்விதமான ஏதோ காரியங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அது சரி தானே-? ஆம், அம்மையாரே. இரவு நேரங்களில் எப்பொழுதும் அவ்விதமாக அவதிப்படுவதை நான் பார்க்கிறேன். அது உண்மை தானே-? (சகோதரி, அது முற்றிலும் உண்மை, உண்மை என்று கூறுகிறார்கள்) எனவே, நீங்கள், உங்களுக்கு... உங்கள் அருகில் ஒரு மருத்துவர் நிற்பதை நான் பார்க்கிறேன். இல்லை, உங்களுக்கு அவ்விதமாக செய்யப்படவில்லையா-? அது உண்மை. மேலும் நீங்கள் உண்மையிலேயே... உங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை உங்கள் முதுகில் தான் இருக்கிறது. அது சரி தானே-? அது உங்கள் முதுகில், அது தான் உங்களுக்கு வயிற்று... இன்னும் அவ்விதமான காரியங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அது உண்மை இல்லையா-? அந்த காரியங்கள் எல்லாம் உண்மைதானே, சீமாட்டியே-? (அந்த சகோதரி, அவையாவும் நிச்சயம் உண்மை, நிச்சயம் உண்மை) இப்பொழுது, அதை ஒருவராலும்... தேவனால் மட்டுமே அதை வெளிப்படுத்த முடியும். எனவே அதை பேசினது நானல்ல. அது என் சத்தம் மட்டுமே, ஆனால் நான் வெவ்வேறு விதமான இடங்களுக்கு சென்று, அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்திருக்கிறேன். அது உண்மை தானே-? (அந்த சகோதரி, அது முற்றிலும் உண்மை, ஒரு சமயம் இரண்டு அறுவை சிகிச்சைகளும், இன்னொரு சமயத்தில் ஐந்து அறுவை சிகிச்சைகள் நடந்தன, என்றார்) இப்பொழுது பார்... அதை குறித்து நான் கூறினேன், நான் உங்களுடன் பேசும் போது, அப்படி செய்யவில்லையா-? சரி அப்படியானால், தேவனை தவிர வேறு யார் அதை அறிவார், அல்லது அக்காரியங்கள் நிகழ்ந்த போது, அதை பார்க்கும்படிக்கு அவ்விடத்தில் யாரோ ஒருவர் இருந்திருக்க வேண்டும். அது சரிதானே-? சில சமயங்களில் என்ன நிகழ்கிறது என்று கூட எனக்குத் தெரியாது. எனவே இப்பொழுது, நீங்கள் எப்பொழுதும் இருந்த உணர்வு போல இது இல்லை. கவனியுங்கள், அது இல்லாமல் போய் விட்டது. தேவனுடைய ஆசீர்வாதம் உங்கள் மேல் வந்த போது அது அப்பொழுதே நீங்கினது. 67. நாத்தான்வேலிடத்தில், 'அவன் அவரிடத்தில் வருவதற்கு முன், நீ மரத்தின் கீழ் ஜெபித்துக் கொண்டிருக்கிறதை கண்டேன்' என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் கூறின அதே ஆவி தானா இது-? அவன் ஒரு கிறிஸ்தவன், அல்லது ஒரு விசுவாசி இன்னும் அப்படிப்பட்டவன் என்று கூறின, அதே ஆவிதானா-? அதே ஆவி தான். பின்னர் அது மறுபடியும் உங்களிடத்திற்கு வந்திருக்கிறது. அது அப்படி இல்லையா-? நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறீர்கள், எங்கள் சகோதரியே, உங்கள் ஜெபங்களுக்கு பதில் கொடுக்கப்பட்டது. உங்கள் கஷ்டங்கள் நீங்கினது. கிறிஸ்து உங்களை சுகப்படுத்தினார். நீங்கள் நன்றாய் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் சென்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நலமாய் இருங்கள். தேவனுடைய ஆவி மற்றும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை நம் மத்தியில் மறுபடியும் கொண்டு வந்து, தேவையாய் இருக்கும் எல்லோரையும் சுகப்படுத்தும்படிக்கு இன்றிரவு பிரசன்னமாயிருப்பதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நன்றி. நண்பர்களே, அவர் இங்கேயிருக்கிறார், நான் அவரை உங்களிடத்தில் கொண்டு வருவதற்கு என்னிடத்தில் எந்த வழியும் இல்லை. உங்களுடைய விசுவாசமே அவரை இங்கே கொண்டு வருகிறது. நோயாளிகள் இங்கே மேடைக்கு வரும் போது அவர்களுடைய முகபாவனை மாறுவதை கவனியுங்கள். 68. இப்பொழுது சிறிது கவனியுங்கள், அபிஷேகம் தொடர்ந்து என் மீது வந்திருக்கும் போது, நான் எங்கே இருக்கிறேன் என்று கூட எனக்குத் தெரியாது. எனவே நாளை இரவு நடக்கப் போகிற கூட்டத்தைக் குறித்து கவனமாயிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கூட்டத்தில் இருக்கிறவர்கள் ஜெபத்தில் தரித்திருங்கள். இப்பொழுது உங்களுடைய அடுத்த நோயாளியை கொண்டு வாருங்கள். சீமாட்டியே, எப்படி இருக்கிறீர்கள்-? நம்முடைய அருமையான இரட்சகர், அற்புதமானவராய் இருக்கிறார், அப்படி அவர் இல்லையா-? ஆம், அம்மையீர். நல்லது, அவர் எப்பொழுதும் இருந்தது போல, இன்றிரவும் நமக்கு அவர் அன்பான மற்றும் இரக்கம் உடையவராய் இருக்கிறார். ஆம், அம்மையீர், நல்லது, அதை விசுவாசிப்பதினாலும் தேவனுடைய அன்பு உங்களுடைய இருதயத்தில் இருப்பதினாலும், அது உங்களை ஒரு கிறிஸ்தவளாக ஆக்குகிறது. (சகோதரி, "இருந்த போதிலும், என்னால் அவரை நேசிக்காமல் இருக்க முடியவில்லை”, என்கிறாள்) நல்லது, அவ்விதமாய் தான் நாம் உணர வேண்டும். அது வெறுமனே மனித உணர்வு, ஆனால் நீதியின் மேல் பசியும் தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். இன்னும் அவ்விதமாய் உணர்வை கொண்டு இருப்பது அது மேலான பாக்கியமாய் இருக்கிறது. இப்பொழுது, ஆம், நீங்கள் கண்ணாடி அணிந்தபடி அங்கே நின்று கொண்டிருப்பதை நான் கவனித்தேன், எவரும் அறிவர்... கூட்டத்திலிருப்பவர் எவருக்கும் அது கண்களில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை அறிவர். இப்பொழுது அவை நன்றாகவும் தெளிவாகவும் இருக்கிறது, ஆனால் குறிப்பாக உங்களுக்கு இடது கண்ணில் பிரச்சனை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அது உண்மையில்லையா-? ("அது உண்மை”, என்கிறார்) ஆம், அம்மையீர். இரண்டு கண்களும் தெளிவாக இருக்கிறது. ஆனால் உங்கள் இடது கண் குருடாகிக் கொண்டே போகிறது. ("அது உண்மை, சகோதரனே”, என்கிறாள்) அது மட்டும் அல்ல, உங்கள் இடது காது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ("ஒ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அது உண்மை”, என்கிறாள்) அது அப்படியில்லையா-? ஆம் அம்மையீர். ஓ, அது உங்கள் இடது பக்கம் முழுவதும்... என்று நான் பார்க்கிறேன். ("கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அது உண்மை தான்”, என்கிறாள்) 69. (ஒலிநாடாவில் வெற்றிடம்)... இந்த பரிதாபமான, கஷ்டப்படும் இந்த பெண்ணின் மேல் என் கைகளை வைத்து, அவள் சுகமாக வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன், கர்த்தாவே. அவளுடைய சுகத்திற்காக, உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், அவளை ஆசீர்வதிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. நன்றி சொல்லியபடியே செல்லுங்கள்... நான் சுகமானேன் என்று மட்டும் சாட்சியிட்டுக் கொண்டு இப்பொழுது செல்லுங்கள். நீங்கள் கொடுத்த சாட்சியின் மேல் தொடர்ந்து நில்லுங்கள். ஆமென். நாமெல்லோரும், "நன்றி இயேசுவே, நன்றி அன்பான இயேசுவே” என்று கூறுவோமாக. சரி, அடுத்த நோயாளியை கொண்டு வாருங்கள். இப்பொழுது ஒவ்வொருவரும், பயபக்தியோடும், விசுவாசத்தோடும் இருங்கள். நீங்கள் விசுவாசிக்கும் போது, தேவன் உங்களை சுகப்படுத்துவார். அவர் உங்களை சுகப்படுத்துவார். 70. இப்பொழுது அன்பான சகோதரியே இங்கே சற்று வாருங்கள். நான் சற்று... அங்கே வெளியே அநேக மக்கள், விசுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையிலேயே என்னை கஷ்டத்துக்குள்ளாக்குகிறது. மற்றும் ஏற்கனவே சுகமாக்கப்பட்ட அநேக மக்கள் இப்பொழுது இங்கே வெளியே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அது உண்மையிலேயே என்னை தளர்வடையச் செய்தோ அல்லது பெலவீனமாக்கவோ செய்கிறது. எனவே இப்பொழுது நீங்கள் எனக்கு அந்நியராய் இருக்கிறீர்கள், உங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, மற்றும் என் சக்தியை சேமிக்கும் வகையில், என்னால் கூடுமானால் (தரிசனத்தை) பார்ப்பதை தவிர்க்கும்படிக்கு, உங்களோடு கூட சற்று உரையாட எண்ணுகிறேன். எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதே அந்த தரிசனம் தான். இப்பொழுது, நீங்களும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர், மற்றும் ஒருவரையொருவர் அறியோம், நான் உங்களை என் வாழ்நாளில் கண்டதில்லை, அவ்விதமே நீங்களும் என்னை உங்கள் வாழ்நாளில் கண்டதில்லை... நீங்கள் கண்டிருக்கிறீர்களா-? நாம் முற்றிலும் அந்நியரே. இப்பொழுது உங்கள் வலது கரத்தை என்னிடத்தில் நீட்டும்படிக்கு நான் கேட்கிறேன். இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கும்படிக்கு நான் கேட்டுக் கொள்கிறேன். ஆம், அம்மையீர், உங்களுக்கு புற்றுநோய் இருக்கிறது. அது உண்மைதானா? உங்களுக்கு புற்று நோய் இருக்கிறது, அது உங்கள் மார்பகத்தில் இருக்கிறது. அது உண்மை தானே-? அது உங்கள் வலது மார்பகத்தில். அது சரி தானே-? எனக்கு எப்படி, எனக்கு எப்படி தெரியும் என்று தானே-? நீங்கள் நினைக்கிறீர்கள். 71. ஒரு காரியத்தை சற்று நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் கை என் கை மேல் இருக்கும் போது, என் கையை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் கை மேல் அந்த சிறிதான வெள்ளை நிறத்தில் ஓடுகிறதை பார்த்தீர்களா-? அதைக் கொண்டு தான் நான் தீர்மானம்... அது என்னவென்று எனக்கு தெரியாது. அதை வெறுமனே அதிர்வுகள் என்று நான் அழைக்கிறேன். அது உங்களுக்குள் வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதற்கு ஜீவன் இருக்கிறது. அது ஒரு கிருமி. நீங்கள் எப்படி உங்கள் தாயின் கர்ப்பத்திற்குள் ஒரு கிருமியாக இருந்து, அணுக்களைக் கொண்டு பெருகி, ஒரு மனுஷனாக வளர்ந்தீர்களோ அவ்விதமாகத்தான் இதுவும். அப்பொழுது அந்த கிருமி உங்களுக்குள் இல்லை, அது மரணத்தை கொண்டு வரும் ஒரு கிருமி. இப்பொழுது அது உங்களுக்குள் வந்து, ஒரு சிறிய வீட்டை கட்டி, அணுக்களைப் பெருக்கி, ஒரு வளர்ச்சியாக மாறியிருக்கிறது. மேலும் அது அணுக்களை பெருக்கி, உங்கள் சரீரத்தைப் போலவே அதுவும் ஒரு சரீரத்தை உருவாக்கிக் கொள்கிறது, ஆனால் அதற்கு ஒரு உருவம் கிடையாது. மற்றும் உங்களைப் போல் அது தன்னிச்சையாக செயல்படுகிற ஒரு நபர் அல்ல. அதற்கு ஒரு எஜமான் உண்டு, அது பிசாசாய் இருக்கிறது-? ஒரு குறிக்கோள் இருக்கிறது, அது உங்கள் ஜீவனை எடுக்க வேண்டும் என்பதே-! 72. இப்பொழுது, இங்கே கவனியுங்கள், நீங்கள் நகர... வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வேதாகமம், "இரண்டு அல்லது மூன்று பேரின் சாட்சியினால் ஒவ்வொரு வார்த்தையும் நிலைவரப்படுவதாக”, என்று கூறுகிறது. அது சரி தானே-? அது உண்மை. இப்பொழுது என் கை மேலிருந்த உங்கள் கையை எடுத்து விட்டு, என் கையை நோக்குங்கள். மற்றவர்களின் சாதாரண கையைப் போல் என் கையும் மாறிவிட்டது. அப்படியில்லையா-? இப்பொழுது உங்கள் கைக் குட்டையை இங்கே வைத்து விட்டு, இங்கே இருக்கிற இந்த கையை எடுத்து, இந்த ஒன்றை, இந்த கையை அதின் மேல் வையுங்கள். என் கையின் மேல் எந்த ஏற்படுத்தியிருக்கிறதா-? மற்ற எந்த மனுஷனின் சாதாரண வித்தியாசத்தையும் அது ஏற்படுத்தவில்லை. அது வித்தியாசத்தை கையைப் போல் தான் அதுவும் இருக்கிறது. சரி, ஏன் இந்த கையை வைத்தால் மாறுகிறது, அந்தக் கையை வைக்கும் போது அது மாறவில்லை என்று நான் ஆச்சரியப்படுகிறேன். இப்பொழுது அது சரியான இடத்தில் பொருத்தப்படவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் கவனியுங்கள், என் கை எப்பொழுதும் போல் சாதாரணமாக இருக்கிறது. இப்பொழுது இந்த என் கையை எடுத்து விட்டு, என் கையை இதின் மேல் வைக்கப் போகிறேன். பாருங்கள், எந்த வித்தியாசமும் இல்லை. 73. மதிப்பிற்குரிய பாக்ஸ்டர், இங்கே வாருங்கள். இது நிகழ துவங்கி கடந்த சில நாட்கள் முதல், அவரை நான் அநேக முறை பரிசோதித்திருக்கிறேன், ஆனால் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பதை நான் அறிவேன். இப்பொழுது அவருடைய, அவரின் வலது கையை என் கை மீது வைக்கப் போகிறேன். இருப்பினும் எந்த ஒரு அறிகுறியும் இல்லை. அப்படி ஏதாவது இருக்கிறதா-? எப்பொழுதும் போல் அது சாதாரணமாகத் தான் இருக்கிறது. இப்பொழுது மதிப்பிற்குரிய பாக்ஸ்டர், உங்கள் கையை எடுத்து விடுங்கள். என் கையை நான் வைக்கிறேன், அப்பொழுதும் அது அப்படியில்லையா-? இப்பொழுது இந்த கையை அங்கே சாதாரணமாகத் தான் இருக்கிறது. வையுங்கள், திரும்பவும் இந்த கையை வையுங்கள். இப்பொழுது என்ன நிகழ்கிறது என்று கவனியுங்கள். பாருங்கள்-? நான் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறேன் என்று கவனியுங்கள். கவனியுங்கள், இந்த கைக்கு பதிலாக இந்த கையை ஏன் வைக்க வேண்டும்-? அவர் என்னுடன் பேசின போது, தேவன் மோசேயினிடத்தில் பேசினது போல, மக்கள் முன்பாக செய்யத்தக்கதாக இரண்டு அடையாளங்களை எனக்கு கொடுத்தார். அவர், "ஒரு நபரை அவருடைய கையை குறிப்பாக வலது கையை பிடித்து தொடர்பு கொள்”, என்றார். அது என் இடது கை வழியாக என் இருதயத்திற்கு செல்லும். கவனியுங்கள். அப்பொழுது ஏதோ காரியம் நிகழ்கிறது. எனவே தான், வேதாகமம், "இரண்டு அல்லது அதற்கு அதிகமான சாட்சிகளால் ஒவ்வொரு வார்த்தையும் நிலைவரப்படுவதாக”, என்று கூறுகிறது. அது சரி தானே-? 74. இப்பொழுது நீங்கள் என்னிடத்திற்கு ஒரு அந்நியனாக நான் உங்கள் கையை தொட்டவுடன் இங்கிருக்கும் பரிசுத்த ஆவியானவர், உங்கள் பிரச்சனை என்ன மற்றும் அது எங்கே இருக்கிறது என்றும் கூறினார். அது சரி தானே-? அது உண்மை. தேவன் மூலமாக அல்லாமல், வேறு எவ்வழியிலும் அதை நான் தெரிந்திருக்கவே முடியாது. அது சரி தானே-? அது ஒரு சாட்சியாக இருக்கிறது. அது சரி தானே-? அது ஒரு சாட்சியாக இருக்கிறது. அது சரி தானே-? இரண்டாவது சாட்சி, ஒரு சரீர மாறுதலை, என் கையில் நீங்கள் பார்க்கிறீர்கள். அது சரி தானே-? இதை பார்த்திராத என் பையனை, முன்னுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது நிகழ்வதை என் மகன் பார்த்ததே இல்லை. மகனே, இது நிகழும்போது நீ அதை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் என் கையை இங்கே வைக்கப் போகிறேன். இப்பொழுது இங்கே என் கை இருப்பதை பார்க்கிறாயா-? பால், உங்கள் கையை நான் பிடிக்கட்டும். மதிப்பிற்குரிய. பாக்ஸ்டரின் கையை நான் இங்கே வைக்கட்டும். பாருங்கள்-! 75. இப்பொழுது இந்த சீமாட்டியின் கை இங்கே நான் வைத்தவுடன், என்ன நிகழ்கிறது என்று கவனியுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்று புரிந்து கொள்கிறீர்களா-? இல்லினாய்ஸில், வன்டலியா என்னுமிடத்தில் அன்றொரு இரவு நீ படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்ததை, இப்பொழுது நினைவு கூறுகிறாயா-? அப்பொழுது எனக்கு சற்று தூரத்தில் கர்த்தருடைய தூதன் நின்று கொண்டிருந்தார். நான் உன் முகத்தை தலையணை வைத்து மறைத்து, உன்னை எழுப்பி, "அங்கே பார்”, என்று உன்னிடத்தில் கூறினேன். அவரைப் பார்த்த நீ என்னிடத்தில் பயந்தபடி ஓடி வந்தாய். அதே கர்த்தருடைய தூதன் தான் இங்கே சாட்சி பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். அது அதே கர்த்தருடைய தூதன். அது தான் பில்லி அவரை முதன் முதலாக பார்த்தது. சரி, இப்பொழுது உன் கையை திரும்பவும் வை. நான் உன் கையை சிறிது நேரம் அவ்விதமாய் பிடிக்க விரும்புகிறேன். மேலும் சகோதரியே அது சரியான ஸ்தானத்தில் இல்லை என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன், பாருங்கள். இப்பொழுது அதை கவனியுங்கள். அதை சற்று நீ கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதோ இங்கே அவை அதிர்வலையாக வருகிறதை கவனியுங்கள். இங்கே கவனியுங்கள். சிறியதாக வெள்ளை நிறத்தில், வெள்ளையான சிறிய சதை வளர்ச்சியைப் போல் இருக்கிறது. அதை நீங்கள் கூட்டத்திலிருந்தே பார்க்கலாம். அதை கவனியுங்கள். இதோ இது இங்கே வருகிறது, அங்கேயும் வருகிறது. அவை அங்கே பரவுகிறதை கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள், அதோ அவை போய் விடுகிறது. இதோ இங்கே மறுபடியும் வருகிறது. அதோ அங்கே இருக்கிறது. இப்பொழுது அது என்ன-? அது, இந்த புற்றுநோயின் ஜீவன். ஆச்சரியப்படுகிறேன், ஏனெனில் அது அதினுடைய ஆவியாய் இருக்கிறது. 76. நான் மட்டும் உங்களை விசுவாசிக்க செய்யக் கூடுமானால், அது உங்களை விட்டு நீங்கி விடும். அப்படி என்னால் செய்ய முடியாத போது, அது உங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும். கல்வாரியில் செய்து முடிக்கப்பட்ட கிரியையின் மேல் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைப் பொறுத்து இப்பொழுது அது இருக்கிறது. தேவன் இயேசுவை அனுப்பினார் என்றும், அவர் உங்கள் சுகத்திற்காக மரித்தார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சரி, சகோதரியே, உங்கள் விசுவாசம் இப்பொழுது உங்களை இரட்சித்தது. கூட்டத்தாரே, அது நின்று விட்டது. பில்லி, இங்கே வா-! சரி பிரசங்க பீடத்தை விட்டு நீங்கள் போகலாம், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் சுகமாயிருங்கள், சகோதரியே. உங்கள் விசுவாசம் உங்களை பூரணமாக சுகமாக்கினது. எனவே, நாமெல்லாரும், "நன்றி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே-!”, என்று சொல்வோம். இப்பொழுது, அவளை சுகப்படுத்தினது என் ஜெபம் அல்ல. அது அவளின் விசுவாசமே-! எனவே இங்கே அவள் நின்று கொண்டிருந்த போது, மூன்று சாட்சிகள் உறுதி செய்தது. முதலாவது, அவள் யாரென்றும், அவள் என்ன செய்தாள் அல்லது அவ்விதமான காரியத்தை அவளுக்கு சொல்லப்பட்டது. இயற்கைக்கு மேம்பட்ட காரியம் அவளிடத்தில் கூறப்பட்டது. பின்னர், அடுத்த காரியமாவது, அவளிடத்தில் என்ன தவறு என்றும், என்ன நிகழ்ந்தது என்றும் சொல்லப்பட்டது. அடுத்த காரியம், அவள் சரீரத்தில் நிகழ்ந்த விளைவுகளை அவள் பார்த்தது. எனவே அடுத்த காரியமாவது, அவள் அங்கே இருந்த போது; அதே இடம், அதே கை, அதை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்த போதே, வீக்கம் குறைந்து, அந்த கையில் இருந்த பாதிப்பு நீங்கினது. அவள் மார்பகத்தில் இருந்த தீவிரமான கட்டியின் ஜீவன் அவளை விட்டு நீங்கினது. அவள் மட்டும் தொடர்ந்து விசுவாசிப்பாளானால்... அதை இப்பொழுது அவள் அறிவாள். அவளை நீங்கள் கேட்டுப் பாருங்கள், ஒரு அசலான குளுமையான உணர்வு அவள் மார்பகத்தில் படர்ந்து சென்று சுகத்தைப் பெற்றுக் கொண்டாளா என்று அவளிடத்தில் கேள்வி கேட்டுப் பாருங்கள். 77. இதை நினைக்கும் போது நாம் பயபக்தியுடன், நம் தலைகளைத் தாழ்த்தி, நம்முடைய ஆண்டவருக்கு நன்றியை செலுத்த வேண்டியதாய் இருக்கிறது. பரமண்டலங்களிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல் பூமியிலும் உம் சித்தம் செய்யப்படுவதாக. அன்றன்று அப்பத்தை எங்களுக்கு தந்தருளும். எங்களுக்கு விரோதமான மீறுதல் செய்கிறவர்களை நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் மீறுதல்களையும் எங்களுக்கு மன்னித்தருளும். எங்களை சோதனைக்கு உட்படாமல், தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும், இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென். சர்வ வல்லமையுள்ள தேவனே-! ஜீவனின் ஆக்கியோனே-! ஒவ்வொரு ஆவிக்குரிய வரத்தையும் அளிப்பவரே-! இந்த மக்கள் மேல் உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்பும். இந்த மணி வேளையில், நீர் அவர்களை காண வந்திருக்கிறீர் என்றும்; உயிர்தெழுந்த கிறிஸ்துவை, பரிசுத்த ஆவியானவரின் ரூபத்தில் இந்த பூமிக்கு திரும்பவும் அனுப்பியிருக்கிறீர் என்பதையும் அறிந்து கொள்ளும்படிக்கு அவர்களுடைய விசுவாசத்தை உயர்த்தும். மேலும் ஆதி அப்போஸ்தலர்கள், எம்மாவுக்கு போகும் வழியில் தேவனுடைய கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்தெழுந்து, மக்கள் மத்தியில் ஜீவிக்கிறார் என்பதை அடையாளம் கண்டு கொள்ளும்போது, "நம் இருதயம் நமக்குள் பற்றி எரிகிறதே", என்று கூறினது போல், நாங்களும் இன்றிரவு சொல்லட்டும். 1900 ஆண்டுகளுக்கு முன் மரித்த அவர்; உயிர்தெழுந்தார் என்றும், என்றென்றும் ஜீவிக்கிறார் என்றும், அவருடைய சபையில் அவர் வாசம் செய்கிறார் என்றும், அவருடைய கிரியைகளின் மேலும், கல்வாரியில் அவர் பட்ட கொடூரபாடுகளின் மேலும் அறிக்கை செய்கிற விசுவாசிகளுக்கு பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் இன்றிரவு நாங்கள் திடமாக அறிந்திருக்கிறோம். சர்வ வல்லமையுள்ள தேவனே, அவருக்காக எங்கள் நன்றி தெரிவித்தலை ஏற்றுக் கொள்ளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நாங்கள் மன்றாடுகிறோம். ஆமென். 78. நல்லது, அந்த மனிதனை இங்கே கொண்டு வாருங்கள். மாலை வணக்கம் ஐயா-! தேவனுடைய ஆசீர்வாதம் உன் மேல் வரும் என்று நான் நம்புகிறேன், நண்பனே. நீங்கள் கர்த்தர் மேல் இன்னும் அதிகமாக விசுவாசிக்கத்தக்கதாக, இன்றிரவு தேவன் உங்கள் விஷயத்தில் ஒரு காரியத்தை செய்வாராக. நிச்சயமாக, நீங்கள் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் கண்கள் மோசமாக இருக்கிறது என்று எவரும் அறிவார். ஆனால் அதைக் காட்டிலும் ஏதோ வகையில் மேலும் மோசமாக இருக்கலாம். இப்பொழுது நான் கூறினது உண்மையென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? தேவனைக் குறித்து நான் கூறினது உண்மையென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? கிறிஸ்துவைக் குறித்து நான் கூறினது உண்மையென்று விசுவாசிக்கிறீர்களா-? பரிசுத்த ஆவியானவரைக் குறித்து நான் கூறினது உண்மையென்று விசுவாசிக்கிறீர்களா-? எனவே வார்த்தை பிரசங்கிக்கப்பட்ட பின், அவருடைய மக்களை ஆசீர்வதிக்கும்படிக்கு, இந்த கடைசி நாட்களில் தேவன் அனுப்பின தூதனானவர் கீழே இறங்கி வந்திருக்கிறார். மேலும் அக்காரியங்களின் மீதான விசுவாசமானது, ஊழியக்காரர்களால் காலத்தினூடாக கட்டப்பட்டு, அவரை அவருடைய மக்கள் முன்பாக மகிமைப்படுத்தவும், இன்னும் அவர் மாறாதவராயிருக்கிறார் என்று அவருடைய மக்களை பார்க்கச் செய்யும்படிக்கும் இந்த கடைசி நாட்களில் அவருடைய தயவான அன்பானது கீழே இறங்கி வந்து, ஒரு வகையான காரியத்தை செய்கிறதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அவர் இன்னும் என்றென்றும் ஜீவிக்கிறவராய், நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். 79. தேவ தூதர்கள் அவருடைய பிரசன்னத்தில் அனுப்பப்படுகிறார்கள், ஊழியம் செய்யும் ஆவிகளான அவர்கள் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து அனுப்பப்படுகிறார்கள். எப்படி எனில் தேவன் பூமியிலிருந்து தன் ஆவியை எடுக்கமாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா, சகோதரனே-? தேவன் தான் அனுப்பின மனிதனை எடுத்துக் கொள்கிறாரே தவிர, தன் ஆவியை எடுப்பதில்லை. தேவன் எலியாவை காட்சியிலிருந்து எடுத்தார், ஆனால் எலியாவின் ஆவி எலிசாவின் மேல் வந்தது. பின்னர் பல நூறு வருடங்களுக்குப் பின், அதே ஆவி, யோவான் ஸ்நானகன் மேல் வந்து, அதே விதமாக நடந்திடும்படிக்குச் செய்தது. பாருங்கள், அது இங்கே திரும்ப வரும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது. தேவன் தன் மனிதனை எடுத்துக் கொள்கிறார், ஆனால் அவருடைய ஆவியோ நிலைத்திருக்கிறது. அவர் அவருடைய குமாரனை காட்சியிலிருந்து எடுத்தார், ஆனால் அவருடைய பரிசுத்த ஆவியான அவருடைய ஆவியோ பூமியின் மேல் நிலைத்திருந்தது. மனிதர்கள் மத்தியில் அவர் ஜீவிக்கும்படிக்கு அவரை திரும்பவும் பூமிக்கு அவர் அனுப்பினார். அதைக் குறித்து நீங்கள் உணர்வுள்ளவர்களாய் இருக்கிறீர்களா-? (ஒரு மனிதன், "ஆம், நான் இருக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன்”, என்கிறார்) அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? (நான் அதை விசுவாசிக்கிறேன்). 80. வேதாகமமும், "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்”, என்று கூறுகிறது. எனவே அவர் கூறினது உண்மைதானா என்று பார்க்கலாம், "இன்னும் கொஞ்ச காலத்திலே, உலகம் என்னைக் காணாது”, என்று அவர் கூறினார். அதுவே உலகத்தின் நிலை, இப்பொழுது இருக்கிற நாளின் வழியாக அது இருக்கிறது. "அவர்கள் இனி மேல் என்னைக் காண மாட்டார்கள்”, “ஏனெனில் நாம் குற்றவாளிகளானதால், பாவமறியாததும், இரத்தம் சிந்தப்படும் செம்மறியாடாகவும் பலியிடப்பட்ட, அவருடைய சரீரமானது நமக்காக பலி கொடுக்கப்பட்டது", உலகமோ இனி என்னைக் காணாது, ஆகிலும், நீங்களோ என்னைக் காண்பீர்கள், என்றார். எனவே, “நீங்கள்”, என்பது யார்-? அது விசுவாசிகள். "ஏனெனில் நான் உங்களுடன் உங்களுக்குள் உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்”, அது பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் மேலும் அங்கு நின்று கொண்டவர்களோடு மட்டும் இருப்பேன் என்று அர்த்தமா-? அவர்களோ இன்று இரவு ஜீவிக்கவில்லை. அவர்கள் மகிமையில் ஜீவிக்கிறார்கள். ஆனால் உலகத்தின் முடிவு பரியந்தம் விசுவாசிகள் அவரை அறிந்திருப்பார்கள். அது சரி தானே-? 81. ஐயா, நீங்கள் ஆழமாக சிந்திக்கிறவராய் இருக்கிறீர்கள், அப்படியில்லையா நீங்கள்-? ஆம், ஐயா. நீங்கள் எப்பொழுதும் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பவர். நான் இதைச் சொல்வேனென்றால், நீங்கள் இதை அறிந்து கொள்ளலாம், அது. நீங்கள் எல்லோரும் பாலத்துக்கு வருவதற்கு முன்னமே அதை பலமுறை கடந்து விடுகிறீர்கள். ஏனெனில் அது தலைமுறை தலைமுறையாக வரும் சுபாவம். அது உங்கள் சுபாவ அமைப்பாய் இருக்கிறது. அது உண்மையாக இல்லையா-? ("அது உண்மை”). நீங்கள் வயிற்றுக் கோளாறினால் இன்றிரவு அவதிப்படுகிறீர்கள். அது சரி தானே-? ("சரி”) காரணம் நீங்கள் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடக் கூடாமல் இருக்கிறீர்க்ள். அது வயிற்றுப் புண் பாதிப்பாய் இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு காரியத்தினால் அது ஏற்பட்டதாய் இருக்கிறது. நீங்கள் தளர்வுற்றிருக்கிறீர்கள், உங்கள் கண்களும் மோசமான நிலையில் இருக்கிறது. மற்றும் நடைமுறையில் நீங்கள் நீண்ட காலம் தளர்வுற்றிருக்கிறீர்கள். அது மனதளவில் தளர்வுற்றிருக்கிறீர்கள். அது சரி தானே-? உங்கள் வேலை ஸ்தலங்களில் சில சமயம் நீங்கள் அப்படி இருக்கிறதை நான் கவனிக்கிறேன். நிறைய நேரங்களில் உங்கள் பெலன் குன்றிப் போய் நீங்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் அளவுக்குச் சென்று விடுகிறது. என் சகோதரனே, நான் உங்கள் மனதைப் படிக்கவில்லை. அது உண்மை தானே-? (ஆம்) நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவியானவர் தான், உங்கள் ஜீவியத்தில் இருக்கிற காரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அது சரி தானே-? (அது சரி) சரி தான், நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொள்கிறீர்களா-? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லி இருக்கிறேன். அது சரி தானே-? (அது சரி தான்). அது இயற்கைக்கு மேம்பட்ட நபரால் நடந்தது, எனவே அது அவ்விதமாகத் தான் நடந்தது என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா-? அப்படியானால் நீங்கள் என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே நீங்கள் வீட்டுக்குச் சென்று, நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்களோ அதைச் சாப்பிடுங்கள். உங்கள் வயிற்றுப் புண் சுகமானது. நீங்கள் போகலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே கர்த்தராகிய இயேசு உங்களை சுகப்படுத்துவாராக. நல்லது, ஒவ்வொருவரும் மிகவும் பயபக்தியாக இருங்கள். வாருங்கள், சீமாட்டியே. இப்பொழுது பயபக்தியாய் இருங்கள். இன்றிரவு, தேவன் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கப் போகிறார். தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள். 82. சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள்-? நீங்கள் ஒரு விசுவாசி என்பதை நான் பார்க்கிறேன். சில காலமாக நீங்கள் நிம்மதியற்றவராய் இருக்கிறீர்கள், அப்படியில்லையா நீங்கள்-? உங்கள் மனதில் ஏதோ ஒரு காரியம் இருக்கிறது, அதுவே உங்களை கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. உண்மையிலேயே, நீங்கள் ஜீவிக்கிற உங்களின் உற்பவ காலமும் ஒரு காரியமாய் இருக்கிறது. நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், அது உங்களை முழுவதும் நிம்மதியிழக்கச் செய்து, உங்களை அதிகமாக நிலைகுலையச் செய்திருக்கிறது. நீங்கள் மாதவிடாய் முடியும் காலத்தில் இருக்கிறீர்கள் என்பதை நான் பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்விதமாக அது உங்களை அந்த அளவுக்கு பாதித்திருக்கிறது. பிசாசு உங்களிடத்தில் பொய் சொல்லுகிறான். எப்படியெனில் உங்களிடத்தில் எல்லா காரியமும் தவறாய் இருக்கிறது என்று உங்களை சிந்திக்கச் செய்கிறான், நீங்கள் சுகமடையப் போவதில்லையென்றும், உங்கள் முடிவு நேரம் நெருங்கி விட்டது என்றும் உங்களைச் சிந்திக்கச் செய்கிறான், மேலும் நீங்கள் (கிருபையின்) கோட்டை கடந்து விட்டீர்கள் என்றும் சில சமயங்களில் உங்களை சிந்திக்கச் செய்கிறான். ஆனால் அது தவறு. மேலும் நீங்கள் ஒரு கட்டியினால் அவதிப்படுகிறீர்கள், அப்படி நீங்கள் பாதிக்கப்படவில்லையா-? அது உண்மை தானே-? (அந்த சகோதரி, "ஆம் அது உண்மை” என்கிறாள்) அது முற்றிலும் உண்மை தானே-? (ஆம், அது உண்மை தான்) எனவே நான் கூறின யாவும் உண்மையே. (அது சரி தான்) எனக்கு உங்களைப் பற்றித் தெரியாது. அப்படித்தானே, சீமாட்டியே-? (இல்லை, உங்களுக்கு என்னைத் தெரியாது). உங்களை முழுவதுமாக எனக்கு தெரியவே தெரியாது. நாம் அந்நியர்களாய் இருக்கிறோம். எனவே அது உண்மை. (அது உண்மை தான்). எனவே, உங்களைக் குறித்து குறிப்பிட்ட யாவும், இயற்கைக்கு மேம்பட்ட ஒருவரால் மட்டுமே அது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அது சரி தானே-? (அது சரி தான்) நான் அவருடைய தீர்க்கதரிசி என்று என்னை விசுவாசிக்கிறீர்களா-? (நான் விசுவாசிக்கிறேன்) அப்படியானால் நீங்கள் இங்கே வாருங்கள், உங்கள் மீது என் கரத்தை வைக்கட்டும். 83. பிதாவே, இது வார்த்தையில் எழுதப்பட்டிருக்கிறது, நம்முடைய எஜமானரின் உதட்டிலிருந்து வந்த கடைசி வார்த்தைகள். அவர், "விசுவாசிப்பவர்களால் இந்த அடையாளங்கள் பின் தொடரும், எப்படியெனில் வியாதியஸ்தர்கள் மேல் அவர்கள் கரங்களை வைக்கும் போது, அவர்கள் சொஸ்தமடைவார்கள் என்று கூறியிருக்கிறார். தேவனே, இன்றிரவு இதோ நான் கரம் பிடித்திருக்கிறவளை இந்த நபரை ஆசீர்வதியும். பிசாசே, நீ இவளைப் பிடித்து வைத்திருக்க முயற்சித்தாய், ஆனால் நீயோ இன்றிரவு இந்த கூட்டத்தார் முன்னிலையில் வெளியரங்கமாக்கப்பட்டாய். கட்டி என்ற வடிவத்தில் நீ அவளுக்குள் மறைந்திருந்தாய். மருத்துவரின் பார்வையிலிருந்து மறைந்து கொள்ளலாம் என்று நீ நினைத்தாய். ஆனால் நீ தேவனிடத்திலிருந்து மறைந்து கொள்ள முடியாது. அவர் உன்னைக் காட்டிலும் பெரியவராய் இருக்கிறார். கல்வாரியில் உன்னையும், உன்னைப் போன்ற யாவரின் மீதும் ஜெயமெடுத்த இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக வந்து இருக்கிறேன். இப்பொழுது இங்கே இதற்கு சாட்சியாக இருக்கிற தேவனுடைய தூதன் மூலம் எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, அவளை நீ இனி ஒரு போதும் பிடித்து வைத்திருக்க முடியாது என்றும் அவளை விட்டு வெளியே வா என்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கட்டளையிடுகிறேன். என் சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நான் உன்னிடத்தில் கடுமையாகப் பேசவில்லை. (அதெல்லாம் ஒன்றுமில்லை) இப்பொழுது நீங்கள் சுகமானீர்கள். நீங்கள் வீட்டுக்குச் சென்று, நன்றாயிருங்கள். (நன்றி தேவனே) இப்பொழுது நினைவு கொள்ளுங்கள், இப்பொழுது எப்படி நீங்கள் உணருகிறீர்களோ அவ்விதமாக நீங்கள் சந்தோஷமாகவும், மிக அருமையாகவும் கிட்டத்தட்ட 70 மணி நேரத்துக்கு, ஒரு வேளை 72, 75 மணி நேரத்துக்கு நீங்கள் உணரலாம். மேலும் உங்களுக்கு சிறிது வியாதி பாதிப்பும், தீவிர தலைவலியும் வரும். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொடர்ந்து உங்கள் சுகத்திற்காக தேவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டிருங்கள். அது கொஞ்ச நாட்களுக்கு நீடிக்கும். உங்களுக்கு மயக்கம், தலைசுற்றல் மற்றும் நிலைகுலைதல் ஏற்படும். அல்லாமல் நீங்கள் படுக்கையில் இருக்கவும் நேரிடும். ஆனால் சோர்ந்து போக வேண்டாம். எனவே இப்பொழுது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்றும் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்றும் கூறிவிட்டேன். சொல்லப்பட்டது (அது உண்மை தான்) என்ன நிகழும் என்பதும் உண்மை தானே-? அது உண்மை என்று உங்களுக்கு தெரியுமானால், அது சரி தானா-? நீங்கள் சொல்லலாம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், என் சகோதரியே. எனவே நாம், "கர்த்தருக்குத் துதி உண்டாவதாக என்று சொல்வோமாக”. 84. நீங்கள் விசுவாசிகளா-? இப்பொழுது ஜெப அட்டை இல்லாதவர்கள், சிறிது நேரம் நிறுத்துங்கள், சிறிது நேரம் ஜெப வரிசையை நிறுத்துங்கள், ஒரு நிமிடத்துக்கு, அதிக பட்ச பெலவீனமாக இருக்கிறேன். ஒவ்வொருவரும் மிகவும் பயபக்தியாக இருங்கள். எனவே சிறிது நேரம் நாம் ஜெபிப்போம். என் ஜீவன் படிப்படியாக குன்றி எஜமானனே, போவது போல எனக்கு தோன்றுகிறது. இன்னும் எவ்வளவு காலம் நான் இந்த உலகில் இருக்கும் படிக்குச் செய்வீர் என்று எனக்குத் தெரியாது. ஆனால், கூடுமானால் உம்மால், அநேக வருடங்களுக்கு என்னை பயன்படுத்தும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். ஆனால், என் இடத்தில் நீர் கிரியை செய்வது முடிந்துவிடுமானால், உடனே உம்மிடத்தில் நான் வந்துவிடட்டும். ஆனால் ஏற்கனவே முன் குறிக்கப்பட்ட வேலை நான் செய்து முடிக்கும் வரைக்கும், நான் இங்கே தரித்திருப்பேன் என்பதை நான் அறிவேன். எனவே இன்றிரவில், ஜெப அட்டைகளைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு இந்த பிற்பகலில் இல்லாதவர்கள், அவர்கள் இங்கே கிடத்தப்பட்டு இருக்கிறார்கள். சிலர் தூக்கு படுக்கைகளிலும் (STRETCHERS), சிலர் கட்டில்களிலும், சிலர் சக்கர நாற்காலிகளிலும், சிலர் கக்கத்தண்டங்களோடும், சிலர் இருதய பிரச்சனைகளால் மரித்துக் கொண்டும், புற்று நோய்கள் இன்னும் எல்லாவிதமான நோய்களிலும் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். அன்பான தகப்பனே, இவர்களை நான் அறியேன். ஆனால் உம்முடைய நேசமான குமாரன் அவருடைய கிருபையால், (பரிசுத்த ஆவியின் மூலம் புத்திரசுவிகாரத்தில் எங்களை உம்முடைய குமாரர்களாக மாற்றியிருக்கிறார். 85. "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்”, என்ற வேத வசனம் நிறைவேறும்படிக்கு சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்மிடத்தில் நான் ஜெபிக்கிறேன். மேலும் அங்கே தூரத்திலிருக்கும் மலைகளில், அங்கேயிருந்த சிறிய வைக்கோல் மெத்தையண்டை அனுப்பப்பட்ட தேவனுடைய தூதன் நான் பார்க்கும்படிக்கு செய்தது போல, இன்றிரவு நீர் செய்ததை காணும்படிக்கு உம்முடைய தாழ்மையுள்ள ஊழியக்காரனுக்கு செய்யும். உம்முடைய மக்களை ஆசீர்வதிக்கும்படிக்கு இன்றிரவு எங்களுக்கு நெருங்கி இருந்திடும். அன்பான தேவனே, எங்களுக்கு உதவி செய்திடும் வகையில், நாங்கள் ஒவ்வொருவரும் உம்முடைய ஆசீர்வாதங்களை பார்க்கும் படிக்கு செய்திடும். மேலும் இன்றிரவு உம்முடைய ஊழியக்காரன் மூலமாக உம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்திடும். இங்கிருக்கும் மக்கள் தங்கள் முழு இருதயத்தோடும், விசுவாசிப்பார்களாக. இங்கே ஜெப அட்டைகள் இல்லாததால், ஜெப வரிசையில் முடியாதவர்கள் அநேகர் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். மற்றும் இங்கே வரும்படிக்கு அநேகர் ஜெப வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாரையும் சுகப்படுத்தும்படிக்கு உம்மிடத்தில் நான் கேட்கிறேன். மேலும் அவர்களுடைய விசுவாசம் இப்பொழுது உயர எழும்பி, "மேடையில் தேவன் இருந்து, எங்கள் எளிமையான சகோதரன் மூலம் கிரியை செய்யும் போது, அதே தேவன் இங்கே என்னோடும் இருக்கிறார் என்றும், தேவன் முகதாட்சண்யம் பாராதவராக இருப்பதால், அங்கே மேடையின் மேல் வருபவர்களை சுகப்படுத்துவாரானால், இங்கே இருக்கிற என்னையும் சுகப்படுத்துவார்”, என்று கூறவார்களாக. இதை அளியும், கர்த்தாவே. 86. என்னிடத்தில் வந்த உம்முடைய பரிசுத்த தூதன் தான் அவருடைய பிரசன்னத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறேன் என்று கூறின அவர் தாமே இப்பொழுது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்முடைய ஊழியக்காரன் மூலமாக பேசுவாராக. ஆமென். “அவர்களை உற்று நோக்கி, அவர்களுடைய எண்ணங்களை அறிந்து”, என்று வேதாகமம் கூறுகிறது. எனவே நீங்கள் எல்லோரும் பயபக்தியாய் இருந்து, இப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களாக. இப்பொழுது, நீங்கள் அங்கே காட்டிலிருக்கும் போது, தேவனை தவிர வெளி உலகத்திற்கு எதற்கும் தொடர்பில்லாமல் இருக்கிறீர்கள், எனவே பரிசுத்த ஆவியானவர் என்னை அனுமதிக்கும் அளவுக்கு நான் அவரிடத்தில் மட்டுமே தொடர்பில் இருப்பேன். நான் எதைக் காண்கிறேனோ, அதை மட்டுமே பேசுவேன், நான் எதை காதில் கேட்கிறேனோ நான் கூறினது உண்மையென்று நீங்கள் எல்லோரும் உங்கள் அதை மட்டுமே பேசுவேன், வேறெதையும் பேச மாட்டேன். முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 87. இங்கே ஜெப வரிசையில் வந்து, என்ன விசுவாசித்தீர்கள், மக்களே-? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? சர்வ வல்லமையுள்ள தேவன் இந்த பிரசங்க மேடையிலிருந்து உங்கள் நிலைமையை எனக்குக் காண்பித்து, உங்களிடத்தில் ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவாரானால், நீங்கள் அப்பொழுது அவரை நிச்சயம் விசுவாசிப்பீர்கள். அப்படி நீங்கள் செய்வீர்களா-? சரி, தேவன் மேல் விசுவாசமாயிருங்கள். ஒரு பெண்ணின் அருகில் அந்த வெளிச்சம் இருக்கிறதை இப்பொழுது தான் நான் பார்க்கிறேன். ஓ. உங்களிடத்தில் என்னை மன்னிக்கும்படி கேட்கிறேன், அந்த பெண் இப்பொழுது தான் சுகமடைந்தாள் என்று நான் நம்புகிறேன். அங்கே உட்கார்ந்திருக்கும் சீமாட்டியே சற்று முன் நீங்கள் ஜெப வரிசையில் இருந்தீர்களா-? நீங்கள் ஜெப வரிசையில் இருந்தீர்களா-? நீங்கள் இங்கே ஜெப வரிசையில் இருந்த போது சுகத்தை பெற்றுக் கொண்டீர்களா-? நல்லது, அதனால் தான் அது இன்னமும் உங்களிடத்தில் இருக்கிறது. என்னால் அந்த வெளிச்சத்தை தெளிவாக பார்க்க முடிகிறது. நான் இப்பொழுது அதை பார்க்கிறது போல, நீங்களும் அதை காணும்படிக்கு உங்கள் கண்களை திறக்கும்படிக்கு நான் தேவனிடத்தில் ஜெபிக்கிறேன். 88. இங்கே அமர்ந்து இருக்கிறார், சரியாக இவ்விடத்தில் ஒரு சீமாட்டி அமர்ந்து கொண்டிருக்கிறார். இல்லை, இங்கே அமர்ந்திருக்கிற இந்த பையன் இல்லை. கூறுங்கள், வாலிப மனிதனே, நீங்கள் தானே... சற்று நீங்கள் எழுந்து நில்லுங்கள். யாரோ ஒருவர் உங்களுக்கு பின்னாக இருந்து இழுக்கிறார். ஓ. நீங்கள் ஒரு ஊழியக்காரர் அல்லது நீங்கள் ஊழியக்காரராக ஆகப் போகிறீர்கள். இல்லை, உங்கள் தகப்பனார் தான் ஊழியக்காரராக இருக்கிறார். அது சரி தானே-? நான் ஒரு சபையை பார்க்கிறேன். ஓ, நீங்கள் மிகவும் வியாதியாய் இருக்கிறீர்கள், வாலிப மனிதனே, அவ்விதமாக நீங்கள் இல்லையா-? சமீபமாக நீங்கள் ஏதோ விதத்தில் பரிசோதிக்கப்பட்டீர்கள். அது சரி தானே-? மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டோ அல்லது அவ்விதமாக அது தாமே அநேக மருத்துவர்கள் ஒன்றாக சேர்த்து கண்ணோக்கி நான் ஒரு இதய துடிப்பை அறியும் கருவியை பார்க்கிறேன். சரி தானே-? அது உண்மை தானே-? (ஆம்) என்பதே ஒரு, அது உங்கள் இருதயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறர் கர்த்தராகிய இயேசு தாமே உங்களை ஆசிர்வதித்து உங்களை சுகப்படுத்துவாராக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. விசுவாசமுடையவராய் இருங்கள். 89. சரியாக அங்கே பின்னால் அமர்ந்து கொண்டிருக் சீமாட்டியே, நீங்கள் கண் பார்வையை இழந்து கொண்டிருக்கிறீர்கள், அப்படியில்லையா, சகோதரே உங்கள் கண்களில் ஏதோ கோளாறை நா.... 1900 ஆண்டுகளுக்கு முன்னமே கிறிஸ்து உங்களை சுகப்படுத்தி இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா-? உங்கள் காலூன்றி எழுந்து நின்று, ஆம், அம்மையீர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் பார்வைலை பெற்றுக் கொள்ளுங்கள். சரியே-! உங்களுக்கு அருகில் அமர்ந்துள்ள மனிதனுக்கு 'ஆஸ்துமா' உள்ளது. அப்படி இல்லையா, சகோதரனே-! சரி தானே `ஆஸ்துமா' இயேசு கிறிஸ்து 1900 ஆண்டுகளுக்கு முன்பே உங்களைச் சுகப்படுத்தினார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அவருடைய தீர்க்கதரிசி என்று என்னை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா-? அப்படியானால் காலூன்றி உங்கள் சுகத்தை இயேசு கிறிஸ்து நாமத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு அடுத்து அமர்ந்திருக்கும் சீமாட்டி, உங்களிடத்தில் ஜெப அட்டை இல்லை. சீமாட்டியே, உங்களிடத்தில் ஜெப அட்டை இருக்கிறதா-? ஆம், நீங்கள் பெண் போக்கினால் அவதிப்படுகிறீர்கள். அது சரிதானே-? சகோதரியே, கர்த்தராகிய இயேசு தாமே உங்களை சொஸ்தமாக்குவாராக. தேவனிடத்தில் விசுவாசமுள்ளவராய் இருங்கள். 90. இந்த வழியில் இருக்கிறவர்கள் எத்தனைப்பேர் தேவனை விசுவாசிக்கிறீர்கள்-? சற்று பொறுங்கள். அகே பின்னால் பயபக்தியோடு, கைகளை உயர்த்திலிருக்கும் அங்கே பின்னால் இருக்கும் உங்களுக்கு ஜெப அட்டை கிடைக்கவில்லை. விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள் இப்பொழுது நம்பிடுங்கள். அப்படிப்பட்டவர்கள் அநேகர் இருக்கிறீர்கள். அங்கே அமர்ந்து இருக்கும் உங்களைத்தான், கொண்டிருக்கிறீர்கள். அப்படியில்லையா, ஐயா-? ஆம், நீங்கள் டை (TIE) அணிந்தபடி என்னை விநோதமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு காரியத்திற்காக ஜெபிக்க நான் பார்க்கிறேன். மேலும் நீங்கள், நான் மட்டும் அவருக்கு... எல்லோரும் ஒரு அறையில் ஜெபித்துக் கொண்டிருக்கிறதை நெருங்கி செல்வேனென்றால், நான் சுகமாகிவிடுவேன்”, என்று ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அது சரி தானே-? நீங்கள் சிறுநீரக கோளாறினால் அவதிப்படுகிறீர்கள், அது உண்மை தானே-? என் சகோதரனே, இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துவாராக. நீங்கள் எழுந்து நில்லுங்கள். அதோ அங்கே நகர்ந்து போகிற அந்த ஆவி, கருமையான ஒன்று, ஒரு இருள் அவரை விட்டு நீங்கிச் செல்கிறது, நீங்கள் பார்க்கக் கூடியதாக அது இருக்கிறது, கவனியுங்கள், அதை அதின் மேல் பரிதபிக்கக் கூடிய ஒரு கூட்டாளி இருக்கிறது. ஒரு நிமிடம் பொறுங்கள். ஆம் அதோ டி சர்ட் அணிந்து அமர்ந்திருக்கும், கருமையான தலைமுடி கொண்ட அந்த மனிதன் மேல் அது விழுகிறது. தன் கைகளை தன் முகத்தில் வைத்திருக்கிறார். வாலிப மனிதனே, எழுந்து நில்லுங்கள். நீங்கள் சிறு நீரக கற்கள் கோளாறினால் அவதிப்படுகிறீர்கள், அது சரி தானே-? இயேசுவை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்ளுங்கள், அவர் தாமே உங்களை 1900 ஆண்டுகளுக்கு முன்னமே சுகப்படுத்தியிருக்கிறார். தேவன் மேல் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்பட வேண்டாம். 91. அங்கே உட்கார்ந்திருக்கும் வெள்ளையரல்லாத சீமாட்டியே, உங்கள் பிரச்சனை என்ன சீமாட்டியே-? நீங்கள் மூட்டு வீக்கத்தினால் அவதிப்படுகிறீர்கள், அப்படியில்லையா-? (ஆம்) அப்படியானால், ஏன் நீங்கள் எழுந்து நின்று இயேசு கிறிஸ்துவை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்ளக் கூடாது-? உங்கள் கக்கத்தண்டத்தை தூக்கி எறிந்து, வீட்டுக்குச் சென்று, சுகமடைந்தவராக இருங்கள். தேவனிடத்தில் விசுவாசமுள்ளவராய் இருங்கள். முடமானவர்களும், சக்கர நாற்காலியில் இருப்பவர்களும், தூக்கு கட்டிலில் (STRETCHERS) இருப்பவர்களும் இந்த பக்கமாக பாருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் கனடாவிலிருந்து வருகிறீர்கள், மண்ணீரல் வீக்கத்தினால் அவதிப்படுகிறீர்கள், மற்றும் உங்களிடத்தில் ஒரு உண்மை மறைக்கப்பட்டது, சீமாட்டியே, உங்களுக்கு புற்று நோயும் இருக்கிறது. நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் சுகமடைய விரும்புகிறீர்களா-? நான் தேவனிடத்திலிருந்து பெற்று, உண்மையை கூறுகிறேன் என்று விசுவாசிக்கிறீர்களா-? அப்படியானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், உங்கள் கட்டிலை விட்டு எழுந்து, சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள், சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தூக்கு கட்டிலில் (STRETCHERS) படுத்திருக்கும் உங்களைத் தான், நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்களா? நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கும் புற்று நோய் பாதிப்பு இருக்கிறது, அப்படி இல்லையா-? அப்படியானால் ஜீவனுள்ள தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்கள் கட்டிலிலிருந்து எழுந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உங்கள் சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-?... *******